பக்கம் எண் :

496

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
அ.கி. பரந்தாமனார், எம்.ஏ.

* இந்நூல் தமிழைப் பிழையின்றி எழுத வழி காட்டுவது.
தமிழ் இலக்கணத்தை எவரும் புரிந்து கொள்ளும் வகையில்
எடுத்து உரைக்கின்றது. எடுத்துக்காட்டுகளின் மூலம் இலக்கண
விதிகளை மனத்தில் நன்கு பதிய வைக்கின்றது.

* இந்நூல் மொழித் தேர்ச்சி பெறவும் உதவும்; உடனடி பிழை
திருத்தக் கையேடாகவும் அமையும்.

* இந்நூலைப் பயில்பவர்க்கு நல்ல தமிழ் எழுதும் ஆற்றலும்
திறமையும் உண்டாவது உறுதி.

* நல்ல தமிழ் எழுத ஆர்வமுள்ளவர்க்குத் தக்கதொரு
பார்வை நூல்-கையேடு இது.

* அ.கி.ப. தமிழ் ஆசிரியராகச் சென்னைத் திருப்பவுல்
உயர்நிலைப் பள்ளியிலும், தமிழ்ப் பேராசிரியராக மதுரைத்
தியாகராசர் கல்லூரியிலும் பணிபுரிந்தார்.

* அ.கி.ப. பல நிலையினர்க்கும் பல ஆண்டுகளாக நல்ல
தமிழை வழுவின்றி எழுதக் கற்பித்து வந்த முதிர்ந்த அனுபவத்தால்,
காலத்துக்கேற்ற நிலை அறிந்து பட்டறிவால் இதனை உருவாக்கி
உள்ளார்.