|
பேச்சாளராக
அ.கி. பரந்தாமனார், எம்.ஏ.
எட்டாம் பதிப்பு-பக்கங்கள் 160 - விலை ரூ.20/-
பேச்சாளராக வேண்டிய இன்றியமையாமை இன்று பலருக்கும்
ஏற்பட்டு விட்டது. கூட்டங்களுக்கு ஏற்ற பேச்சாளரையும் பேச்சுத்
தலைப்பையும் தெரிவது முதல், வரவேற்புரை, திறப்புரை, தலைமையுரை,
பொருள்கள் பற்றிய விளக்கவுரை, நன்றியுரை, இன்னோரன்ன பற்பல
பேச்சு முறைகளும், ஒவ்வொரு நிலையிலும் அவரவர் கவனத்தில்
வைக்கத்தக்க நுட்பமான தந்திரங்களும் இந்நூலில்
கொடுக்கப்பட்டுள்ளன. மேடைப் பேச்சுச் சிறப்பாக அமைவதற்குப்
பேச்சாளர்கள் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்களும் விளக்கமாகக்
கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் பேச்சாளராவதற்குப் பெருந்துணை புரியும்
அரிய வழி காட்டி.
கவிஞராக
அ.கி. பரந்தாமனார், எம்.ஏ.
நான்காம் பதிப்பு-பக்கங்கள் xviii + 342 விலை ரூ.70/-
இந்நூல் செய்யுள் எழுதும் முறையை எளிய உரை நடையில்
பலரும் நன்கு தெரிந்துகொள்ளுமாறு வழிகாட்டுவது; புதிய முறையில்
மிக விளக்கமாக அமைந்திருப்பது; நடைமுறைக்கு வேண்டிய பழந்தமிழ்
இலக்கியங்களை அறிந்து கொள்ள அடிப்படையான செய்யுள்
இலக்கணத்தையும் தெரிவிப்பது. இதில் தமிழ்ப்பா வகைகளுக்கும்
அவற்றின் இனங்களும் உரிய இலக்கணங்கள் இனிது
விளக்கப்பட்டுள்ளன. புதுக்கவி வகைகளும் ஓரளவு அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளன; யாப்பிலக்கண நுட்பங்களும் எடுத்துக்
காட்டப்பட்டுள்ளன. இது கவிஞராவதற்கு வேண்டுவன அனைத்தையும்
நன்கு புகட்டுகிறது. இது கவிதை இயற்றவும் படிக்கவும்
ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் கற்றறிய வேண்டிய நூல்.
|