இச் சொற்களை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்று
பாகுபாடு செய்யலாம்.
இலக்கண வகை
1. பெயர்ச்சொல் (Noun)
பொருளின் பெயரைக் குறிப்பது
பெயர்ச்சொல்.
பூனை, மதுரை, கண்ணன்.
2. வினைச்சொல் (Verb)
பொருளின் வினையை உணர்த்துவது
வினைச்சொல்,
ஓடுகிறான், ஓடுகிறாள்,
ஓடுகின்றனர், ஓடுகிறது, ஓடுகின்றன.
3. இடைச்சொல் (Dependent Words and Particles)
முன்னும் பின்னும் தனித்தும்
வருமாயினும், பெரும்பாலும்
பெயர் வினைகளை இடமாகக் கொண்டு வருவது இடைச்சொல்.
இடை - இடம்.
அ, இ. உ என்னும் சுட்டெழுத்துகளும்,
எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் வினா
எழுத்துகளும்,
ஏகாரம், உம்மை, ஓகாரம்
ஆகியவைகளும் இடைச் சொற்களே,
தான், மற்று என்பவையும்
இடைச் சொற்களாகும்.
ஐ, ஆல் முதலி்ய வேற்றுமை உருபுகளும்
இடைச் சொற்களே,
மற்று என்பது இக்காலத்தில்
மற்ற என்று மருவி வருகிறது இஃதும்
இடைச் சொல்லே.
முன், பின், இனி, தொறும், தோறும், வாளா, சும்மா, ஆவது
ஆதல், ஆயினும், தான், ஐயோ, அந்தோ, பொள்ளென,
பொருக்கென
முதலியவை இடைச் சொற்களே.
|