5.2
சொல்லியல்
(Etymology - on words)
எழுத்து தனித்து நின்றாயினும் பல எழுத்துக்கள் தொடர்ந்து
நின்றாயினும் பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். பொருளை
அறிவதற்குக் கருவியாய் இருப்பது சொல்.
ஒரு சொல் இன்ன திணை என்றும், இன்ன பால்
என்றும், இன்ன
எண் என்றும், இன்ன இடம் என்றும், இன்ன வேற்றுமையைக்
கொண்டு
வருகிறது என்றும் தெரிவிக்கும். வெளிப்படையாகவும் குறிப்பாகவும்
பொருளை அறிவிக்கும்.
சொல்லை வடமொழியில்
பதம் என்பர். இப்பதம் பகுபதம்
என்றும், பகாப்பதம் என்றும் இருவகைப்படும். பகுதி,
விகுதி,
இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரிக்கப்படும் சொல் அல்லது
பதம் பகுபதமாகும். இவ்வாறு பிரிக்க முடியாதது பகாப்பதமாகும்.
|
பகுபதம் -
|
பார் + க் + கின்று + அன் +
அன் =
பார்க்கின்றனன்.
|
|
பகாப்பதம் -
|
கண் |
இது க என்றும் ண் என்றும் பிரிக்க முடியாதது; பிரித்தால்
பொருள் வராது.
பகுபதம், பகாப்பதம் ஆகிய சொற்களை
இலக்கணத்திற்குப்
பயன்படும் வகையில் பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல்,
உரிச்சொல் என்று பிரிக்கலாம். இலக்கியத்திற்குப்
பயன்படும் வகையில்
|