பக்கம் எண் :

52நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

2. சொல்லுக்கு முதலில் ‘ஒள’க்கு ‘அவ்’ போலியாக வரும்.

ஒளைவையார் - அவ்வையார்

3. ‘ஐ’ காரத்திற்கு ‘அய்’ போலியாக வரும்

ஐயன் - அய்யன்

II இடைப்போலி (Medial Interchange)

சொல்லுக்கு இடையில் `அ`கரத்திற்கு `ஐ` போலியாக வரும்

அரயன் (அரசன்) - அரையன்

III.கடைப்போலி (Final Interchange)

1. சில சொற்களின் இறுதியில் ‘ம்’ என்னும் எழுத்துக்கு ‘ன்’
போலியாக வரும்.

நலம் - நலன் அறம் - அறன்

2, சில சொற்களின் இறுதியில் உள்ள ‘ல்` என்னும்
மெய்யெழுத்துக்கு ‘ர்’ என்னும் எழுத்து போலியாக வரும்.

குடல் - குடர்
சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
சுவல் - சுவர்

3. சில சொற்களின் இறுதியில் ’ல்’ என்னும் எழுத்துக்கு ஈடாக
‘ள்’ என்னும் எழுத்து போலியாக வரும்.

மதில் - மதிள் செதில் - செதிள்

இச்சொற்களை இருவகையாக எழுதினாலும் தவறில்லை என்பதற்காகப் போலியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.