பக்கம் எண் :

எழுத்தியல்51


சொல்லுக்கு இடையில் வாராத எழுத்து

ட், ற் என்னும் எழுத்துகளுக்குப் பக்கத்தில் எந்த மெய்யும் வாராது.

அதற்கு, முயற்சி, நட்பு, தட்பம்.

பார்ப்பதற்கு - இச்சொல்லை, நினைவில் வைத்துக் கொண்டால்
இடையில்ர் என்னும் இடையின மெய்க்கு முன் வேறு மெய் வரும்
என்றும். வல்லின ற் என்னும் மெய்க்கு முன் வேறு மெய் வாராது
என்றும் தெரிந்து கொள்ளலாம்.

சொல்லுக்கு இறுதியில் வாராத எழுத்து

ற் என்னும் எழுத்துச் சொல்லுக்கு இறுதியில் வாராது. கதிற் என்று
எழுதுவது தவறு. கதிர் என்று எழுதுவது சரி.

நெல் + பயிர் = நெற்பயிர். இப்படிச் சந்தியில் ‘ல்’ ‘ற்’ ஆகுமேயன்றி,
‘ற்’ சொல்லுக்கு ஈற்றில் நிற்காது.

நெற்பயிர் - இத்தொடரைப் பிரித்தால் நெல் + பயிர் என்றே
பிரிக்க வேண்டும்.

இப்பகுதியைப் படிப்பதால் எழுத்துப் பிழை உண்டாகாது.

போலி
(Interchange of Letters)

ஒரு சொல்லில் இயல்பாய் இருக்கும் எழுத்துக்கு ஈடாகப் பிறிதோர்
எழுத்து வந்து பொருள் வேறுபடாதே நிற்கும் இடத்தில் உள்ள
அவ்வெழுத்து, போலி எழுத்து எனப்படும். போல வருவது போலி.
இது தமிழ்ச் சொல்லில் மட்டும் வரும்.

போலி மூவகைப்படும். அவை முதற்போலி, இடைப்போலி,
கடைப்போலி என்பவை.

I.முதற்போலி
(Initial Interchange)

1. சொல்லுக்கு முதலில் `ந`கரத்துக்கு `ஞ`கரம் போலியாக வரும்.

நாயிற்றுக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை
நயம்பட உரை - ஞயம்பட உரை