முதல் வேற்றுமை
தம்பி
அரசன்
மகன்
அன்னை
மக்கள் |
விளிவேற்றுமை
தம்பி - இயல்பாதல்
அரசு - ஈறு கெடுதல்
மகனே - ஈற்றில் ஓரெழுத்துமிகுதல்.
அன்னாய் - ஈறுதிரிதல்
மக்காள் - ஈற்றயல் திரிதல். |
அண்மை விளியில் இயல்பும் ஈறு கெடுதலும், சேய்மை விளியில்
ஈறு திரிதல், ஈறுகெட்டு அயல் நீறுதல் முதலியவையும் வருவதைக்
காணலாம்.
தம்பி, அப்ப, ஐய. -
தம்பீ, அப்பா, ஐயாவே. - |
அண்மை விளி.
சேய்மை விளி. |
விளிக்கப்படாத பெயர்கள்
சில பெயர்கள் விளிக்கப்படுவதில்லை.
எவன், எவள், எவர், யாவன், யாவள், யாவர் என்னும்
உயர்திணை வினாப்பெயர்களும்;
எது, எவை, யாது, யாவை என்னும் அஃறிணை வினாப்
பெயர்களும்;
அவன், அவள், அவர், இவன், இவள், இவர் என்னும்
உயர்திணைச் சுட்டுப் பெயர்களும்;
அது, இது, அவை, இவை என்னும் அஃறிணைச் சுட்டுப்
பெயர்களும்;
தான், தாம் என்னும் பொதுப் பெயர்களும்;
மற்றையார், பிறன், பிறள், பிறர் முதலிய பெயர்களும் விளி
ஏற்கமாட்டா.
அவனே, இவனே, எவனே, அதுவே, இதுவே, பிறனே, பிறளே
என்று இவை விளிக்கப்படா என்றறிக.
அவனே இங்கே வா என்று சொல்வோமா? சொல்ல மாட்டோம்.
|