வேற்றுமை ஏற்கும்போது மாறுபடும் பெயர்கள்
|
நான், யான் - |
என்னை, என்னால், என்னோடு, எனக்கு,
எனக்காக, என்னில், எனது, என்னுடைய,
என்னிடத்தில். |
|
நாம், யாம் - |
நம்மை, எம்மை, நம்மால், எம்மால், நமக்கு,
எமக்கு, நமக்காக, எமக்காக, நமது, எமது,
நம்முடைய, எம்முடைய, நம்மிடத்தில்,
எம்மிடத்தில். |
|
நீ - |
உன்னை, நின்னை, உன்னால், நின்னால்,
உனக்கு, நினக்கு, உனக்காக, நினைக்காக,
உனது, நினது, உன்னிடம், நின்னிடம். |
|
நீர், நீங்கள் - |
உம்மை, உங்களை, உமக்கு, உங்களுக்கு. |
|
நீயிர், நீவிர் - |
உமக்காக, உங்களுக்காக, உம்மிலிருந்த,
உங்களிலிருந்து, உமது, உங்களுடைய,
உம்மிடத்தில், உங்களிடத்தில். |
|
நான் - |
தன்னை, தன்னால், தன்னொடு, தனக்கு,
தனக்காக, தன்னிலிருந்து, தனது, தன்னுடைய,
தன்னிடத்தில். |
|
தாம்,தாங்கள்- |
தம்மை, தங்களை, தம்மால், தங்களால்,
தமக்கு, தமக்காக, தங்களுக்கு, தங்களுக்காக,
தம்மில், தங்களில், தமது, தம்முடைய,
தங்களுடைய, தம்மிடத்தில், தங்களிடத்தில். |
குறிப்பு: நீ என்பதற்கு இராமநாதபுர மாவட்டத்தில் நீன், என்றும்,
நீர் என்பதற்கும் நீம் என்றும் இன்றும் மக்களிடம் சொற்கள் வழங்கக்
காண்கிறோம். நீன் என்பதே நின், நின்னை, நின்னுடன் நினது,
நின்னிடம் என்றும், நீம் என்பதே நும், நுமது, நும்மிடம் என்றும்
வேற்றுமை ஏற்றுத் திரிந்திருத்தல் வேண்டும்.
நீம் + கள் = நீங்கள் என்றாவதும் காண்க. ‘நன்றப் பொருளே’
என்று தொடங்கும் சிந்தாமணி விமலையார் இலம்பகச்
|