செய்யுளில், "அன்றைப் பகலில் அடியேன் வந்தடைவன் நீமே வென்றிக்
களிற்றா னுழைச் செல்வது வேண்டும் என்றான்" எனும் அடியுள் நீம்
என்னும் சொல் வந்திருத்தல் அறிக.
அது, இது, எது, அவை, இவை, எவை, பிற, மற்றவை எல்லாம்
என்பவை வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது கீழ்க்காணும் முறையில்
வரும்.
|
அது - |
அதனை, அதனால், அதற்கு, அதனின்று,
அதனுடைய, அதனிடம். |
|
இது - |
இதனை, இதனால், இதற்கு, இதனின்று,
இதனுடைய, இதனிடம். |
|
எது - |
எதனை, எதனால், எதற்கு, எதனின்று,
எதனுடைய, எதனிடம். |
|
அவை- |
அவற்றை, அவற்றால், அவற்றிற்கு,
அவற்றினின்று, அவற்றினுடைய, அவற்றினிடம். |
|
இவை - |
இவற்றை, இவற்றால், இவற்றிற்கு, இவற்றினின்று
இவற்றினுடைய, இவற்றினிடம். |
|
எவை - |
எவற்றை, எவற்றால், எவற்றிற்கு, எவற்றினின்று
எவற்றினுடைய, எவற்றினிடம். |
|
பிற - |
பிறவற்றை,
பிறவற்றால், பிறவற்றிற்கு,
பிறவற்றினின்று, பிறவற்றினுடைய, பிறவற்றினிடம். |
| மற்றவை- |
மற்றவற்றை, மற்றவற்றால், மற்றவற்றிற்கு,
மற்றவற்றினின்று, மற்றவற்றினுடைய,
மற்றவற்றினிடம். |
|
எல்லாம்- |
எல்லாவற்றையும், எல்லாவற்றாலும்,
எல்லாவற்றிற்கும், எல்லாவற்றினின்றும்,
எல்லாவற்றினுடைய, எல்லாவற்றினிடமும். |
குறிப்பு : மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் அது, இது, எது
ஆகியவை அன் சாரியை பெற்று வந்திருப்பதையும், அவை, இவை,
எவை, பிற, மற்றவை, எல்லாம் ஆகிய சொற்கள் அற்றுச் சாரியை
பெற்று வந்திருப்பதையும் காண்க.
|