|
மக
மக்களிடத்து அன்பு செய்ய வேண்டுமென்றும்,
மற்ற வுயிர்களிடத்து அருள்பூண்டொழுக வேண்டுமென்றும், ஆயிரக்கணக்கான பனுவல்களும் நம்மிடத்துள்ளன.
இருந்தும் என் பயன்?
அமெரிக்கரும் மேனாட்டாரும் நம்போல
நடிக்காவிடினும், பொறிவினைப் புரட்சியை உண்டுபண்ணி எல்லா வினைகளையும் சூழ்ச்சியத் துணைகொண்டே
செய்துவருவதால், குதிரையினமும் கழுதையினமும் முற்றும் விடுதலை பெற்றுள்ளன. மாட்டினம் உணவிற்கன்றி
வேறெவ் வகையிலுங் கொல்லப்படுவதில்லை.
நாமும் மேலையர்போற் பொறிவினைப்
புரட்சியை யுண்டாக்கி, மேற்கூறிய விலங்கினங்களின் உரிமையைக் காப்போமாக.
- “உரிமை வேட்கை” பொங்கல் மலர்
1973
|