|
பன
பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி
நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு,
அருவா வடதலை நாடு எனச் செந்தமிழ் நாட்டுத் தென் கீழ்ப்பான் முதலாக வடகீழ்ப்பா லிறுதியாக
எண்ணிக் கொள்க.
தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்றமென்றும்,
தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன.
நச்சினார்க்கினியர் உரை:
திசைச்சொல்லாகிய சொல், செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும், பன்னிரண்டையும்
புறஞ்சூழ்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாந்தாங் குறித்த பொருளையே விளக்குந் தன்மையை உடையன
எ-று.
உம்மையை எச்சவும்மையாக்கிப் பொருளுரைக்க. எனவே, இயற்
சொல் போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்காவாயின.
பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி
நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு , மலையமா நாடு, அருவா
நாடு, அருவா வடதலை நாடு எனத் தென்கீழ்ப்பால் முதலாக வடகீழ்ப்பா லீறாக எண்ணுக.
இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும்
பழந்தீவுங் கொல்லமுங் கூபமுங் கொங்கணமுந் துளுவுங் கடகமுங் கருநடமுங் குடமும் வடுகுந் தெலுங்குங்
கலிங்கமுமாம்.
தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும்:
குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் நாயை ஞெள்ளை யென்றும்; குட நாட்டார் தந்தையை அச்சனென்றும்;
கற்கா நாட்டார் வஞ்சரைக் கையரென்றும், சீத நாட்டார் ஏடாவென்பதனை எலுவனென்றும், தோழியை
இகுளையென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும், பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும்,
சிறுகுளத்தைப் பாழியென்றும்; அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணியென்றும்;
அருவா வடதலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப.
இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடம் கரைய, சிக்க,
குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டி லென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது.
ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.
தெய்வச்சிலையார் உரை:
செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தங் குறிப்பினையுடைய, திசைச்சொல்லாகிய
சொல் - எ-று.
பன்னிரு நிலமாவன:
வையை யாற்றின்... நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, கருங்குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு,
கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா, வடதலை நாடு என்ப. இவை
|