|
New Page 5
தைத்தெங்கின் முந்நிலைகள்
1. மொட்டத்தை
2. கிளியோலத்தை
3. குழித்தை
தைத்தெங்க முருட்டின் இருநிலைகள்
1. குதிரக்கொளம்பன்
2. ஆனயடியன்
தெங்கின் உறுப்புகள்
|
அல்லி(அலச்சில்) |
= |
தென்னம்பூ |
|
கொதும்பல் |
= |
பாளை மூடி |
|
குலச்சில் |
= |
பாளைத்தண்டு |
|
வெளிச்சில் |
= |
சிறுகுரும்பை |
|
கரிக்கு |
= |
பெருங்குரும்பை |
|
ஏணு |
= |
தேங்காயின் மூலை |
|
மொத்தி |
= |
இதக்கை (calyx) |
|
செகரி |
= |
தேங்காய்மட்டை |
|
கழம்பு |
= |
பருப்பு |
|
பயல |
= |
வழுக்கை |
நால்வகைக் கள்
1. இளய கள்ளு
2. மதுரக் கள்ளு
3. கைப்புக் கள்ளு
4. மூத்த கள்ளு
சில தென்சொற்கள் பழம்
பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்குகின்றன.
எ-டு:
கோயிலகம் = அரண்மனை
அம்பலம் = கோயில்
பொன்னம்பலம், வெள்ளியம்பலம்,
சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக.
"வெயில்என் கிளவி மழையியல் நிலையும்"
(தொல். புள்ளி. 82)
என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி
வெயில் என்னும் நிலைமொழி அத்துச் சாரியை பெற்றும் புணரும் புணர்ச்சியை, இன்று, 'வெயிலத்துச்
சென்னு', 'வெயிலத்துப் போகருது' என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின்றோம்.
|