|
எ
எ-டு :
செய்கின்றான்-செய்குந்நான்-செய்குநன்.
செய்குந்நான்-செய்யுந்நான் - செய்யுநன்-செய்நன்.
மகிழ்நன், வாணர் (வாழ்நர்),
ஆஅகுந (தொல். 932), “களையுநர் (குறள். 879), 'பாடுநர்',‘ஈகுநர்’ (புறம். 235),
‘பகருநர்’, ‘ஓசுநர்’, ‘தருநர்’(சிலப். இந்திர.) முதலிய நிகழ்கால வினையாலணையும் பெயர்களெல்லாம்,
மேற்கூறிய வகையில் அமைந்தவையே. 'கின்று' என்னும் இயல்நிலைக்கும் 'குந்'-'உந்'-'ந்' என்னும்
இறுதித் திரிநிலைகட்கும் உள்ள தொடர்பை, 'குந்நு', 'உந்நு' என்னும் இடைத்திரிநிலைகளாகிய
மலையாள வடிவுகளே காட்டி நிற்றல் காண்க. இவ் நிகழ்கால இடைநிலையின் இயல்பை விரிவாக
விளக்கினாம். ஆண்டுக் காண்க.
(2) எதிர்மறை ஏவல்வினை
செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல்
அல்லது முன்னிலை விலக்குவினை, மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். தமிழ்
வடிவில் விளங்காத இயல்பு மலையாள வடிவில் விளங்கித் தோன்றுகின்றது. 'செய்யருது' என்பது 'செய்யரிது'
என்பதன் திரிபு. 'செய்யரிது' என்பது செய்ய முடியாது என்னும் பொருளது. பெரும்பாலும் முடியாமை அல்லது
இயலாமைப்பொருட்டுச் சொற்களே விலக்கு வினையாகின்றன. 'செய்யக்கூடும்', 'செய்யக்கூடாது'; 'செய்யப்படும்',
'செய்யப்படாது' என்னும் வினைகள், உடன்பாட்டு வடிவில் முடிதற் பொருளையும் எதிர்மறை வடிவில்
முடியாமைப் பொருளை அடியாகக் கொண்டு விலக்குப்பொருளையும், முறையே, உணர்த்துதல் காண்க. 'செய்யாதே'
என்னும் வினை 'செய்யருதே' என்னும் ஏகாரவீற்று வடிவின் திரிபாம். ஆயின், 'செய்யாதே' என்பது
தமிழில் ஒருமைக்கு மட்டும் உரித்தாயிருக்க, செய்யருது என்பது மலையாளத்தில் ஒருமை பன்மை
இருமைக்கும் பொதுவாம். செய்யருதே என்பது மலையாளத்தில் செய்யருதெ என்றும் நிற்கும். இனி,
அருது என்பது மலையாளத்தில் துணைவினையாய் மட்டுமன்றித் தனிவினையாகவும் வரும்.
எ-டு :
ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இவ்
ஆட்கு வேறு வேலை கூடாது.
(3) இகரவீற்று இறந்தகால வினையெச்சம்
இறந்தகால வினையெச்ச வடிவுடன் 'ஆல்'
விகுதி சேர்வதால், ஒருசார் எதிர்கால வினையெச்சந் தோன்றும்.
|
எ-டு: |
வந்து |
+
|
ஆல்
|
- |
வந்தால் |
|
|
கண்டு |
+
|
ஆல் |
- |
கண்டால் |
|
|
சென்று |
+
|
ஆல்
|
- |
சென்றால் |
|
|
கிட்டி |
+
|
ஆல் |
- |
கிட்டியால்-கிட்டினால் |
யகரம் சிலவிடத்து நகரமாக மாறுவது
இயல்பு.
|