பக்கம் எண் :

மலையாளமும் தமிழும்71

இன

    இனி, மொழித்துறையில் மட்டுமன்றிக் கலைத்துறையிலும் பழந்தமிழ் மரபு மலையாள நாட்டிலேயே போற்றப்பட்டு வருவதைக் காணலாம். மாதங்களை ஓரைப் பெயராற் குறிப்பதும் கதகளி   என்னுங் கூத்துவகையும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளே.

    இதுகாறும் கூறியவற்றால், மலையாளம் வடமொழி கலந்த சேர நாட்டுக் கொடுந்தமிழே என்றும், அது தமிழ்த்தூய்மைக்கும் திரவிடச் சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சிக்கும் பெரிதும் துணையாவதென்றும், அதிலுள்ள தென்சொற்கள் கலந்தாலன்றித் தமிழ்ச்சொற்றொகுதி நிரம்பா தென்றும் தெற்றெனத் தெரிந்து  கொள்க.

- “செந்தமிழ்ச் செல்வி” நவம்பர் 1955