5
|
5. |
ஒரே பேரினமாயிருந்த தமிழர் ஐம்பதிற்கு
மேற்பட்ட அகமணப் பிறவிக் குலங்களாகப் பிரிந்து போனமையும், தத்தம் பெயருக்குப் பின்
பிரிவினை முத்திரையாக வெவ்வேறு பொருளற்ற பட்டத்தைச் சேர்த்துக்கொண்டமையும், தமிழருள்
தலையாய வகுப்பினரும் தம்மை அயலாருக்குத் தாழ்ந்தவராகக் கருதிக் கொள்ளுதலும். |
|
6. |
மூவாயிர வாட்டை யடிமைத்தனத்தால்,
தமிழருள் நூற்றுக் கைம்பது பேர் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் ஆகிய மூவகக் கரணங்களை அறவே
யிழந்துள்ளமை. |
|
7. |
ஆங்கிலரும் நயன்மைக் கட்சித்
(Justice Party) தலைவரும் கண் திறந்தும் கண்ணை மூடிக் கொண்டமை. |
|
8. |
சுந்தரம் பிள்ளையும்
மறைமலையடிகளும் விழிப்பூட்டி வழி காட்டிய பின்பும், வையாபுரிகளைப் போற்றிப் பல்கலைக்கழகத்
துணை வேந்தராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் அமர்த்தி வருதல். |
|
9. |
சிறந்த புதுப்புனைவாளரான கோவைத்
துரைச்சாமி நாயக்கரை ஊக்காது வயிறெரிய வைத்தமை. |
|
10. |
தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்திய
இராசகோபாலாச்சாரியாரே, அதன் தீமையுணர்ந்து ஆங்கிலத்தையே இந்தியப் பொது மொழியாக்க அறிவுறுத்தியும்,
பேராயத் தமிழர் இந்தியைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்தல். |
|
11. |
தமிழைத் தி.மு.க அல்லது அ.தி.மு.க
மொழியென்று பேராயக் கட்சித் தமிழரும் பிறரும் புறக்கணித்தல். |
|
12. |
அறிவியல் முறைப்பட்ட கொடிவழி
(Geneological) முறை மொழி நூலைப் புறக்கணித்து, தமிழுக்குக் கேட்டை விளைக்கும் வண்ணனை
மொழிநூலைத் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் புகுத்தியிருத்தல். |
தமிழ் உலக முதன்மொழியும் உயர்தனிச்
செம்மொழியுமாதலால், மென்மையும் தூய்மையும் அதன் இன்றியமையாத இயல்புகளாகும்.
குமரிநாட்டுத் தமிழர் வாயில் தோன்றிய
ஒலிகள், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக மொத்தம் முப்பதே. பிற மொழிகள் பிற்காலத்திலும்
வன்புலங்களிலும் தோன்றியமையால், அவ்வக்கால வளர்ச்சிக்கும் நில வியல்பிற்கும் தட்பவெப்ப
நிலைக்கும் குரல் வாயமைப்பிற்கும் ஏற்றவாறு சில பல வல்லொலிகள் தோன்றியுள்ளன. ஆயினும்,
எம் மொழியிலும் எல்லா வொலிகளு மில்லை.
இலத்தீன்
மொழியில் ஜ, ஷ, ழ, ற முதலியன இல்லை. கிரேக்க மொழியில் ஜ, ஷ, ச, ழ, ற,
F முதலியன இல்லை.
ஆங்கில மொழியில்
ழ,ற
|