| | "அறத்தா றிதுவென வேண்டா" | (37) |
| | "அன்பீனு மார்வமுடைமை யதுவீனும்" | (74) |
| | "கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்லது" | (570) |
| என்னுங் குறளடிகளும், |
| | "அவ்விரு முதலின் தோன்றும் அதுவே" | (555) |
| | "அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் | (560) |
| என்னும் தொல்காப்பிய அடிகளும், இப்புணர்ச்சி யமைந்தனவாகும். |
| இனி, இதற்கு விலக்காக, |
| | "உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி" | (164) |
| என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்ப, அது என்னுஞ்சொல் அன்று என்னும் வருமொழியொடு குற்றுகரம்போல் உகரங்கெட்டுப் புணர்ந்து அதன்று என நின்றதே, செய்யுளில் அளபெடுத்து அதா அன்று என நீண்டும் பின்பு அதான்று எனக்குறுகியும் வந்ததாகத் தெரிகின்றது. இக்கருத்துக் கொண்டே, |
| | "அதுமுன் வருமன் றான்றாம் தூக்கின்" | (180) |
| என்று நன்னூலார் நூற்பா யாத்தார் போலும்! |
| | "சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே." | (176) |
| என்னும் தொல்காப்பிய நூற்பாவும், முற்றுகர வீற்றுச் சுட்டுச்சொல் உயிருடன் உகரங்கெட்டுப் புணர்தலு முண்டென்பதையே, வேறொரு வகையில் உணர்த்தும். |
| மேற்கூறியவற்றால், என்றும் உயிர்முதற் சொல்முன் அஃது என் னும் ஆய்தம்பெற்ற சுட்டுச் சொல்லே வரவேண்டுமென்பது தவறென் பதும், அது என்னும் முற்றுகர வீற்றுச் சொல்லும் வரலாமென்பதும், அஃது என்பது உயிர் முதற்சொல் முன்னரேயே பெரும்பான்மை எழுவாயாகவும் சிறுபான்மை |