பக்கம் எண் :

104தமிழர் வரலாறு-2

ஐயன் - ஐயர் (உயர்வுப்பன்மை) =பெரியோர், உயர்ந்தோர். இறைவனடியார்பெரியோராதலின், சேக்கிழார் கண்ணப்பரையும்திருநாளைப் போவாரையும் திருநீலகண்டயாழ்ப்பாணரையும் ஐயர் என்னுஞ் சொல்லாற்குறித்தார்.

"சார்வலைத் தொடக்கறுக்கஏகும்ஐயர் தம்முனே" 

(கண்ணப்.70)

"ஐயரே அம்பலவர் அருளாலிப்பொழுதணைந்தோம்." 

(திருநாளைப்.30)

"அளவிலா மகிழ்ச்சியினார்தமைநோக்கி ஐயர்நீர்" 

(திருஞான.133)

ஐ - ஐயள் = வியக்கத்தக்கவள். (ஐங்.255)

ஐயன் - ஐயை = 1.தாய். 2.காளி (அம்மை).3.தலைவி. 4.தவப்பெண். 5.ஆசிரியன் மனைவி.

ஐயன் - ஐயா! = எல்லாப் பெரியோரையும்விளிக்கும் விளி.

ஐயன் - ஐயே! = 1.கீழ்மக்கள் தலைவனைவிளிக்கும் விளி.

"ஐயே! நானுங் கொன்றவ னல்லேன்" 

(திருவிளை.பழியஞ்.24)

2.வியப்புக் குறிப்பு. (வ.ஆ.மா.).

ஐயையே! (ஐயே ஐயே) = அருவருப்புக்குறிப்பு.

ஐயன்-ஐயோ! = 1. இரக்கக் குறிப்பு,2.வருந்தற்குறிப்பு.

ஐயன்-ஐய - ஐயவோ! ('ஐய' அண்மைவிளி)

ஐயையோ! (ஐயோஐயோ) = மிக வருந்தற்குறிப்பு.

ஐயன் - அய்ய(பாலி).

ஐயர் என்பது சுமார்த்தப் பிராமணரும்,ஐயங்கார் என்பது வைணவப் பிராமணரும், தமக்குஆண்டுகொண்ட குலப்பட்ட மாகும்.ஐயர்அவர்-ஐயவாரு(தெ.)-ஐயகாரு-ஐயங்கார்.

ஐயன் என்னும் அடிப்படைத்தென்சொல்லை, ஆர்ய என்னும் இனப்பெயரின்திரிபாகச் சென்னைப் ப.க.க. அகரமுதலி காட்டியிருப்பது, அதைத் தொகுத்த பிராமணத்தமிழ்ப்புலவரின் துணிச் சலையும், மானமிழந்ததமிழத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின்அடிமைத்தனத்தையுமே காட்டும்.

பிராமணர் ஏனை மூவகுப்பார்க்கும்தொழில்களை வரை யறுத்துவிட்டு, தமக்குமட்டும்சமையத்திற் கேற்றவாறு எத் தொழிலையும்மேற்கொள்ளும் உரிமையை வைத்துக்கொண்டனர்.துரோணாச்சாரி கிருபாச்சாரி என்னும் இருபிராமணரும், பாரதக்காலத்தில் வில்லாசிரியராயிருந்தனர். புத்தர் காலத்தில் தேவேந்திரநாதன்என்னும் பிராமணன் பயிர்த்தொழிலைமேற்கொண்டான். ஆயினும், அவன் பிராமண வரணம்மாறவில்லை. இற்றைப் பிராமணர் தோட்டிவேலைதவிர எல்லா வேலையுஞ் செய்கின்றனர். ஆயினும்,பிராமணர் என்றும்