ஊராளி தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில். பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண உட்பிரிவுகள் உண்டு. பட்டம் - கவுண்டன். ஓதுவார் தொழில் - சிவன் கோவிலிற் பூசைசெய்தல். இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர். பட்டம் - ஓதுவார். கடசன் தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல். பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள். பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன். கணக்கன் தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல். பிரிவு - சீர், சரடு, கைகாட்டி,சோழியன் என்னும் நான்கு. பட்டம் - பிள்ளை. கணிகை (பெண்) தொழில் - நாடக வரங்கிலும்கோவிலிலும் நடஞ்செய்தல். பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை. கள்ளன் பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் களவிற் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர். "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்" | (தொல்.புறத்.2) |
தொழில்-பண்டைநாளிற்போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும்கல்வித் தொழிலும். பண்டை இடம் - சோழநாடு.
|