பக்கம் எண் :

112தமிழர் வரலாறு-2

செட்டி

பெயர் விளக்கம் - பெரும்பொருளீட்டிநாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப்பண்டை யரசர் அளித்த பட்டம் எட்டி என்பது."எட்டி குமரன் இருந்தோன் தன்னை" (மணிமே.4.58). எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி(எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில்எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது. ஸ்ரீ (திரு) என்பதன்உச்சத்தரமான சிரேஷ்டி என்னும் வடசொற்கும்,செட்டி என்னும் தென் சொற்கும் தொடர்பில்லை.

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டிஎன்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப்பெயராகவுங் கொண்டுள்ளனர்.

(1)

வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).

(2)

வாணியச் செட்டி.

தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என நான்கு.

(3)

நாட்டுக் கோட்டைச் செட்டி
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
பிரிவு - ஒன்பது கோவில்கள்.

(4)

நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்)

(5)

காசுக்காரச் செட்டி.

தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6)

பேரிச் செட்டி.

தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.

பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப் பிரிவுகள்.

(7)

கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8)

மளிகைச் செட்டி. தொழில் - பலசரக்கு விற்பனை.

(9)

மஞ்சட்குப்பத்துச் செட்டி

(10)

பன்னிரண்டாஞ் செட்டி.