கோலியன் தொழில் - நெசவு பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும். பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல்அடைமொழி. சவளக்காரன் தொழில் - ஓடம் விடுதல், பயிர்விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல். பட்டம் - படையாட்சி(பயிர்த்தொழிலாளர்), அண்ணாவி(இசைத்தொழிலாளர்). சாயக்காரன் தொழில் - சாயங் காய்ச்சுதல். சாலியன் தொழில் - நெசவு. பிரிவு - 24 புறமணவீடுகள். பட்டம் - அடவியார். சான்றான் (சாணான்) பெயர்: சான்றோர் = போர்மறவர். "தேர்தர வந்த சான்றோரெல்லாம்" | (புறம்.63) |
சான்றோர்-சான்றார் "ஈழக்குலச் சான்றார் ஏனாதிநானார்" | (பெரியபு.15:2) |
தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டிகாய்ச்சுதல், வாணிகஞ் செய்தல், குடிக்காவல்,படைக்கலம் பயிற்றல். பிரிவு - கருக்குமட்டையன்,மேனாட்டான், கொடிக் கால் நட்டாத்தி, பிழுக்கை. ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை. குலப்பட்டம்-நாடார், சேர்வைகாரன்.முக்குந்தன் என்பது வழக்கு வீழ்ந்தது. சிங்கன் தொழில் - வேட்டையாடல்.
|