பக்கம் எண் :

114தமிழர் வரலாறு-2

பண்டாரம்

பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம்போன்ற உயர் பொருட் பேரறிஞன்.

பிரிவு - வெள்ளாளப் பண்டாரம்(கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம்,ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர்பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்

பெயர் - இல்லத்துப் பிள்ளை.

தொழில் - நெசவும் வாணிகமும்.

பிரிவு - பல புறமண இல்லங்கள்.

பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)

தொழில் - சாவறிவித்தலும் தாரைஊதுதலும் இரத்தலும் (சேலம்).

கோவிலில் இசைக்குழல் ஊதுதலும்நட்டுவமும் (திருநெல் வேலி).

பிரிவு - வலங்கை, இடங்கை.

பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை

பெயர் - விலைமகள், பொதுமகள்,வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.

வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரவன்

பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.

இடம் - தஞ்சைக்குத் தெற்கிற்குமரிவரை கடற்கரை.

தொழில் - கடல்மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.

பட்டம் - செட்டி.

பரிவாரம்

வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.

தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.