பக்கம் எண் :

122தமிழர் வரலாறு-2

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர்வட்டத்திற் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்),வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர்.

மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.

திரவிடம்-

(1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
(2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.

 

(3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.

 

(4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) 

பெயர் மாறாதவை : எ-டு: கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்), வெளுத்தேடன் (வண்ணான்).

(2) 

பெயர் திரிந்தவை: எ-டு: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) 

பெயர் மாறியவை: எ-டு: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு).

குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல்.

உடை- பிராமணர்போற் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர்நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல்அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும்ஈறுகள் கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார்,செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்திற் பெண்கொள்ளல்.