மொழி- இயன்றவரை வடசொற் கலந்துபேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருதநூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல். பழக்கவழக்கம் - ஆடவர் காலையிற்சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை. பூசாரி - இருவகைச் சடங்கிற்கும்பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல். ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன்வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப்பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல். ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லதுதொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப்பின்பற்றல். சவ முடிவு - எரிப்பு. இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறி யாமையாலும்அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பேபொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும். குலப்பட்டம் தோன்றிய வகைகள் (1) | முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி. | (2) | முன்னோர் வேந்தனாற் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை. | (3) | முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான். | (4) | முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு). | (5) | ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான். | (6) | தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள். | (7) | தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை). | (8) | அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம். | (9) | சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான். | (10) | பத்திநெறியாட்சி - ஆண்டி. | (11) | வேந்தன் தொடர்பு - தேவன். | (12) | குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி. |
|