பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2127

பிராமண வுண்டிச்சாலைகளில், முதலில்,தமிழர் தலைவாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர்மறைவான உள்ளறையிலும் படைக்கப்பட்டனர். அன்று,பிராமணர் எச்சிலையினின்று கறிவகைகள் எடுத்துத்தமிழர்க்குப் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதை வெள்ளக்கால் சுப்பிரமணியமுதலியார் கண்ணாரக் கண்டு, தாமரைத் திரு. வ.சுப்பையாப் பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். நாகர்கோவில் வாணரான ஆறுமுகம்பிள்ளை என்னும் தொடக்கப்பள்ளி யாசிரியர், ஒருபிராமண வுண்டிச்சாலைக்கு உண்ணச் சென்றபோது,இத்தகைய இழிசெயலைக் கண்ணாரக் கண்ட அவருடையபிராமண நண்பர், அவரை உண்ண வேண்டா வென்றுதடுத்ததாக, அவர் காலஞ் சென்ற பர். இராசமாணிக்கனாரிடம் சொல்லியிருக்கின்றார். தில்லைஇராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர் திரு. சாமிநாத முதலியாரும்,அவர்தந்தையார் ஒரு பிராமணர் வீட்டில் இத்தகையஇழிநிலைக்கு ஆளாகவிருந்து தப்பியதாக என்னிடம்சொன்னார்.

இந் நூற்றாண்டுத்தொடக்கத்தில்,தில்லையில் ஒரு பிராமண உண்டிச்சாலையில்,'பிராமணர்க்கு மட்டும்' என்று ஒரு பலகைதொங்கவிடப்பட்டிருந்தது.

நான் 1928-லிருந்து 1934 வரைஇராசமன்னார்குடியி லிருந்த போது, கீரங்குடிக்கோபாலையர் உண்டிச்சாலையில், தமிழர்க்குஎடுப்புச் சாப்பாடும் இல்லாதிருந்தது.

தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும்,பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, "என்குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது" என்றும்,"எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக்கூடாது" என்றும், "மேலாடையை வல்லவாட்டாகஅணியக் கூடாது" என்றும், "திருமணவூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது" என்றும்,"குடை கொடி பிடிக்கக்கூடாது" என்றும், பலவாறுபிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர்.

வலங்கை இடக்கை வழக்காரம்

குலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலியவிருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகைகுதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலியஊதிகள், வல்லவாட்டு, செருப்பு ஆகியவைபற்றிக்குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும்ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும்பெயர்கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன்(1063-69) அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத்தெரிகின்றது.

"காவிய மாகிய காமீகங் கண்டுகங்காகுலத்தோர்
ஓவிய பாத்திர ராக விருபத்து நான்குயர்ந்த