மேலையாரிய மொழிகள்எல்லாவற்றிலும் எகர ஒகரக் குறில்கள் உள்ளன.வேதமொழியில் மட்டும் அவை யின்மையால், இந்தியஆரியர், கடலிற் காயம் உரசினதுபோல்,வடஇந்தியப் பழங்குடி மக்களொடு இரண்டறக்கலந்துபோய் அவர் மொழியையே மேற்கொண்டமைஅறியப்படும். ஆயின், ஆரியப் பூசாரிகள் மட்டும்தங்கள் உயர்வைக் காத்தற்குத் தனியினமாகவேவாழ்ந்து, மதவியல்பற்றிய தம் முன்னோர்மொழிச் சொற்களை, தம் மந்திரங்கள் என்னும்பாடல்களிலும் இருவகைச் சடங்குகளிலும் பல்வகைவேள்விகளிலும் போற்றி வந்திருக்கின்றனர். இது,அராபியரும் துருக்கியரும் பாரசீகருமான முகமதியர்,இந்தியாவிற்கு வந்தபின் தம் முன்னோர்மொழிகளை மறந்து வடநாட்டுப் பழங்குடி மக்களின்தாய்மொழியாகிய இந்தியையே மேற்கொண்டு,மதத்துறையில் மட்டும் அரபிச் சொற்களையும்பாரசீகச் சொற் களையும் போற்றிவருவது போலாம். ஆரியர் பெருங்கூட்டத்தாராக வந்துஇந்தியாவிற்குட் புகுந்தனரென்றும், பிராமணர்சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும்நால்வகைக் குலவொழுங்கு கொண்டிருந்தனரென்றும்,தம் போர் வலிமையாலேயே வடநாட்டைக்கைப்பற்றினரென்றும், தவறான கருத்துகள் இன்றும்இருந்துவருகின்றன. வடஇந்தியாவில் ஆரியப் பூசாரிகள்தவிர மற்றெல்லாரும் பழங்குடி மக்களொடு கலந்துபோனமையால், இன்று வடநாட்டு மக்களைஆரியரென்றும் திரவிடரென்றும் பிரித்தறியமுடியாது. தென்னாட்டிற்கு வந்த ஆரிய வகுப்பார்பூசாரியரே. ஆதலால், தமிழரும் திரவிடருமானதென்னாட்டு அல்லது தென்னிந்திய மக்க ளெல்லாம்ஆரியக் கலப்பற்ற தூய பழங்குடியினத்தாரே.இந்தியா வெங்கும், தனிப்பட்ட முறையில் ஆடவரும்பெண்டிரும் பழங்குடி மக்களொடு தொன்றுதொட்டுத்தொடுப்பும் மணவுறவும் கொண்டு வந்திருப்பினும்,குலவளவில் ஓரளவு தூய்மையைப் போற்றிவந்திருக்கும் ஆரிய வகுப்பார் பிராமண ரென்னும்பூசாரியரே. ஆரியப் பூசாரிகள், அகக்கரணவளர்ச்சியின்றிச் சிறுபிள்ளைகள் போல்,இயற்கையுஞ் செயற்கையுமான பல்வேறுசிறுதெய்வங்களைப் பற்றி முன்னிலைப் பரவலாகவும்படர்க்கைப் பரவலாகவும் பாடிய பாடற்றிரட்டே,ஆரிய வேதத் தொகுப்பாம். முதன்முதலாகத்தோன்றிய தொகுப்பு (ஸம்ஹிதை) இருக்கு (ருக்) வேதம்.அதில் கங்கை வெளியும் பிரமபுத்திர வெளியுமாகியகீழ் வடவிந்தியாவிற்குரிய அரிசி, ஆலமரம்,வேங்கை முதலியன சொல்லப்படாமையால், அத்தொகுப்பு முழுதும் பஞ்சாபு என்னும் ஐயாற்றுவெளியில் ஆரியர் தங்கியிருந்த போதேபாடப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர். இனி, அவ்வேதப் பிரிவுகளான பத்து மண்டலங்களுள், முதல்தொண்டுள்ளும்
|