(ஒன்பதுள்ளும்) நாற்குலப்பகுப்பைப்பற்றிய குறிப்பேயில்லை யென்றுசொல்லப்படுகின்றது. பத்தாம் மண்டலத்திலுள்ளபுருட சூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் குழறுபடைமந்திரப் போலியும், பிற்காலத்துச்சேர்க்கப்பட்ட இடைச்செருகலே. இது 'தமிழர் மதம்'என்னும் நூலில் விளக்கப்படும். பூசாரிகளல்லாத ஆரிய வந்தேறிகள்பழங்குடி மக்களொடு கலந்து போனதனால், அவர்களொடுகலவாத ஆரியப் பூசாரிகள் நாட்டுமக்களை யடுத்தேபிழைக்க வேண்டியிருந்தது. சிவநெறி யாரும் நாகரிகமக்களும் பொதுமக்களிடை யிருந்ததனால், அவர்களாற் புறக்கணிக்கப்பட்ட ஆரியப் பூசாரிகள்,அரசரை வயப் படுத்தச் சூழ்ச்சி செய்து சில வழிகளைவகுத்தனர். அவற்றுள் ஒன்று வேள்வி வளர்த்தல். தெய்வத்தின் பெயரால் என்னசொன்னாலும் நம்புவதும் எதைக் கேட்டாலும்கொடுப்பதும் ஆகிய மதப்பித்தம், பழங்குடிமக்களின் சிறப்பியல் பென்பது கண்டு, அரசரிடம்சென்று,தாங்கள் தேவர் வழிவந்த நிலத்தேவர்(பூசுரர்) என்றும், தங்கள் மொழி தேவமொழியென்றும் தாங்கள் வகுத்த வேள்விகளைச் செய்தால்அரசர்க்கு வெற்றியும் குடிகட்கு நன்மையும்நாட்டிற்குச் செழிப்பும் உண்டாகுமென்றும்,சொல்லி ஏமாற்றினர். இவ் வேமாற்றிற்கு,அவர்களின் வெண்ணிறமும், உரப்பியும் எடுத்தும்கனைத்தும் ஒலிக்கும் ஒலிகள் மிக்க அவர்களின்மந்திரமொழியும் பெரிதும் துணைசெய்தன. அடியைச்சாய்த்தால் மரஞ்சாய்வதுபோல் அரசனைவயப்படுத்தினால் குடிகள் தாமாக வயப்படுவர் என்றுஅவர்கள் கருதியது நிறைவேறிற்று. விசுவாமித்திரர்போன்ற அரசர் சிலர் வயப்பட்டனர். வேள்வி செய்யவேண்டியமுறையைப்பற்றிப் பெரும்பாலும் உரைநடையில்இருக்கு மந்திரங்களை எடுத்துக் கூறி, அவற்றிற்குஎசுர்(யஜு ர்) வேதத் தொகுப்பென்றும்;வேள்வியிற் பாடற் கேற்றவாறு பல இருக்குமந்திரங்கட்கு இசையமைத்து, அவற்றின்திரட்டிற்குச் சாமவேதத் தொகுப்பென்றும்பெயரிட்டனர். இதனால், முன்னர் ஒரேவேதமாயிருந்தது மூவேதம் (த்ரயீ) ஆயிற்று. வேள்வியில் மந்திரம் கூறித்தெய்வங்களை அழைப்பவன் 'ஹோதா' என்றும், தீவளர்ப்பவன் 'அத்வர்யு' என்றும், இசைவகுத்தமந்திரங்களைப் பாடுபவன் 'உத்காதா' என்றும்பெயர் பெற்றனர். வேள்வியின் பெருமைக்குத்தக்கவாறு, இம் முப்பணியர் தொகையும் மிகும். வேளிரும் மன்னரும் வேந்தரும் போன்றுமூவகை யரசர் செல்வநிலைக்கும் ஏற்றவாறு, சிலபலநாள்களில் முடிவனவும் சிலபல மாதங்களில் முடிவனவும்சிலபல ஆண்டுகளில் முடிவனவுமான
|