பக்கம் எண் :

தமிழர் வரலாறு-215

பற்பல வேள்விகள்வகுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும், பொதுமக்கள்பணம் அரசர் வாயிலாகச் செலவிடப்பட்டது.வேள்விப் பணியாளர் (ருத்விக்குகள்) பொன்னும்மணியும் ஏராளமாகப் பரிசுபெற்றதுடன், ஆயிரக்கணக்கான ஆரியப் பூசாரியர் கொழுக்க விருந்துண்டனர்.இங்ஙனம், அவர்கள் வாழ்க்கை எளியமுறையில் இனிதுநடைபெற வழிவகுக்கப் பட்டுவிட்டது. அரசர், வேள்விவளர்ப்பே கால மழைக்குக் கரணியம் என்றுநம்பியதால், எத்துணைப் பொருட்செலவு நேரினும்பொருட் படுத்தாது, இக்காலத்துப் பொருளியல்வளர்ச்சித் திட்டங்கள் (EconomicProjects) போன்றே கருதி, இயன்றபோதெல்லாம் சிறு வேள்விகளையும் பெருவேள்விகளையும் இயற்றுவித்து வந்தனர்.

ஆரியப் பூசாரிகள் வடநாட்டரசரைவயப்படுத்த இன்னொரு வலக்காரத்தையும்கையாண்டனர். அது தமிழர் மருதநிலத்து வேந்தன்வணக்கமான இந்திர வணக்கத்தைத் தாமுந் தழுவியமை.அரசன் என்று பொருள்படும் இந்திரன் என்னும்பெயர், வேந்தனுக்கு வழங்கிய வடநாட்டுச்சொல்லாகும். இந்திர வணக்கமோ அதையொத்ததோமேலையாரியருக்கில்லை யென்று, மாகசு முல்லர்கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆரியர் தென்னாடுவந்தபின், இந்திரன் என்னும் சொல்தமிழகத்திலும் வழக்கூன்றியது. "இந்திரனேசாலுங் கரி" என்று திருக்குறளிலும் (25),இந்திரவிழவூ ரெடுத்த காதை யென்றுசிலப்பதிகாரத்திலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.இந்திரவிழா பண்டைத் தமிழர் விழாவாயிருந்ததனாலேயே, காவிரிப் பூம்பட்டினத்தார் அந்நகர் மூழ்கும்வரை அதைக் கொண்டாடி வந்தனர்.

"தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த
நாலேழ் நாளினும் நன்கினி துறைகென" 

(மணிமே. 1:4-8)

வடநாட்டரசர் தமிழர் போன்றேஇந்திரனைக் குலதெய்வமாகக் கொண்டிருந்ததனால்,ஆரியப் பூசாரியர் இந்திரனை மன்றாடிப் பாடியமந்திரங்கள் அவர் உள்ளத்தை இறுகப்பிணித்துவிட்டன.

ஆயினும், ஆரியக் கொலை வேள்வியையும்சிறுதெய்வ வணக் கத்தையும் அயன்மொழிமந்திரங்களையும் ஏற்காத சிவ நெறியாரானமன்னர், ஆரியப் பூசாரியரைப் போற்றவில்லை.அதனால், அப் பூசாரியர் தமக்கு வயப்பட்டவரைக்கொண்டே வயப்படாதவரொடு போரிட்டு வென்றனர்.இத்தகைய வெற்றிகளே இருக்கு வேதத்திற்சொல்லப்பட்டுள்ளன. இவ் விருபதாம்நூற்றாண்டிலும், ஆங்கில