பக்கம் எண் :

16தமிழர் வரலாறு-2

ராட்சியும் ஆங்கிலக்கல்வியும் ஏற்பட்ட பின்பும், பேராயக் கட்சித் (Congress)தலைவரான பிராமணர் அறியாமையும் தன்னலமுங்கொண்ட தமிழரைக்கொண்டே, தமிழரையும்திரவிடரையும் முன்னேற்றிய நயன்மைக் கட்சித் (JusticeParty) தலைவரைத்தோற்கடித்திருப்பதையும், திருக்கோவில் தமிழ்வழிபாட்டைத் தடுப்பதையும் நோக்குக.

வடநாட்டுப் பழங்குடி மக்களுள்சிவநெறியாரு மிருந்தமை, அவர் வழிபட்டுவந்ததிருக்குறிப் படிமையை, ஆண்குறித் தெய்வம் (சிச்னதேவ) என்று ஆரியப் பூசாரியர் பழித்ததனால்அறியப்படும்.

இந்திரன் சம்பரனின்100 கோட்டைகளைஅழித்தான் என்று இருக்கு வேதத்திற்சொல்லப்பட்டிருப்பது, (2:14:6) இந்திர வணக்கங்கொண்ட ஓர் அரசனின் வெற்றி இந்திரன்மேல்ஏற்றிக் கூறப்பட் டிருப்பதே.


இராமாயணக்காலம்

(தோரா கி.மு. 1300-1200)

சோழன் வேந்தனானபின் வடநாட்டில்தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன்வழிமரபே, சமற்கிருத இலக்கியத்திற் 'சூரியவமிசம்' என்று சொல்லப்படுவது. அவ் வழியில்வந்தவனே இராமன்.

கம்பராமாயணம், பாலகாண்டம், குலமுறைகிளத்து படலத்தில், இராமனின் முன்னோராகச்சொல்லப்பட்டவர் பதினால்வர். அவர் பெயர்கள்:மனு, பிருது (வேனன் மகன்), இட்சுவாகு, ககுத்தன்(ககுத்ஸன்), பாற்கடல் கடைந்து அமுதளித்தவன்(நிமி?), மாந்தாதா, முசுகுந்தன், சிபி, சாகரர்,பகீரதன், நூறு குதிரைவேள்வி (அசுவமேதம்) செய்தவன்,இரகு, அசன், தசரதன் என்பன.

ஒருகாலத்தில் கலுழன் விண்ணுலகையடைந்து, அங்கிருந்த அமிழ்தத்தைக் கவர்ந்துசென்றான். இந்திரன் தான் திரும்பி வருமளவும்விண்ணகரைக் காக்க முசுகுந்தச் சோழனை அமர்த்தி,அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தையும் நிறுத்திவிட்டு,அமிழ் தத்தை மீட்கச் சென்றுவிட்டான். அக்காலைஅவுணர் திரண்டு வந்து முசுகுந்தனொடு பொருதுதோற்றோடினர். பின்னர் ஒரு வஞ்சனையால் அவனைவெல்லக் கருதி, அவர் மீண்டும் வந்து, அவன் அகக்கண்ணும் காரிருளில் மூழ்குமாறு ஒரு பேரிருள் அம்பைவிடுத்தனர். அவன் செய்வதறியாது மயங்கிநிற்கும்போது, அவன் துணைப்பூதம் ஒரு மந்திரத்தைஉதவ அதனால் தெளிந்து, அவுணரைக் கொன்றுகுவித்தான். மீண்டுவந்த இந்திரன் செய்தியறிந்து, முசுகுந்தனுக்கு நிலையாக வுதவுமாறு அப்பூதத்தையும் அவனுடன் அனுப்பினான்.