பக்கம் எண் :

132தமிழர் வரலாறு-2

ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக்கட்டடத்தில் ஐந்திலே ஒன்று வைக்கப்பட்டன.

திரவிடத்திற்குத் தாயும்ஆரியத்திற்கும் மூலமுமான உலக முதற்றாய்உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சமற்கிருதக்கிளையும் பன்மொழிக் கலவையுமான புன்மொழியென்று,நாலரை யிலக்கம் உருபாச் செலவிட்டுத்தொகுக்கப்பட்ட, சென்னைப் பல்கலைக் கழகத்தமிழ் அகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்அகரமுதலித் திட்டம் ஏற்படுமுன், ஒரு தமிழ்ப்பேரகர முதலி தொகுக்கவேண்டு மென்றும், அதற்குநேருஞ் செலவனைத்தும் புதுக்கோட்டையரசுஏற்றுக்கொள்ளு மென்றும், பாண்டித்துரைத் தேவர்தம்மிடமுள்ள புலவரைக் கொண்டு அப்பணியில்ஈடுபடவேண்டுமென்றும், அவருக்குப் புதுக்கோட்டையரசர் எழுதிவந்த நெடுநாள் எழுத்துப் போக்குவரவடுக்கு, தமக்குப் பின் வந்த பிராமணரால்அகற்றப்பட்டு விட்டதென்று, ஓய்வுபெற்றபுதுக்கோட்டைத் தலைமை நடுத்தீர்ப் பாளர்சிவஞான முதலியார் என்னிடம் சொன்னார்.

ஆரியக் கருத்துகளைப் புகுத்தித்தமிழிலக்கியத்தை ஆரிய வண்ண மாக்குதற்பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல்களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால்இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

பிராமணர் அண்டிப் பிழைக்க வந்தஅயலினச் சிறுகுழுவாரா யிருந்தும், தமிழ்நாட்டுக்கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும்,தமிழ்கெடுமாறும், பல கல்வெட்டுகள் வடமொழியிற்பொறிக்கப்பட்டுள்ளன.

(5) மதத் துறை

கடவுள் மத மறைப்பு:ஊர் பேர் குணங்குறி யின்றி எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றிஉள்ளத்தில் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில்முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும்,அதனாற் பிராமணர்க்குப் பிழைப் பில்லையென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும்,அந் நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

இறைவனொடு தொடர்பின்மை:சிவனியமும் மாயோனி யமும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமைமக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர்அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லதுவிருப்பத்தைத் தானே அவர் கட்குத் தெரியாதஅயன்மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல்போல், கோவிலிலுள்ள பரம