"அந்தண ரென்போ ரறவோர்மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்." | (குறள்.30) |
"அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற்புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்." | (குறள்.46) |
"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம்விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு." | (குறள்.81) |
"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போலமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி." | (குறள்.118) |
"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." | (குறள்.133) |
"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." | (குறள்.134) |
"அவிசொரிந் தாயிரம் வேட்டலி லொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று." | (குறள்.259) |
"அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்." | (குறள்.543) |
"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு." | (குறள்.545) |
"ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்." | (குறள்.560) |
"உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து." | (குறள்.1032) |
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்." | (குறள்.1033) |