பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன.சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவுமுறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலியபண்நுட்பங்களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை. சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவி லுள்ளசுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார்போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கிற் கழைப்பார்ஒருவருமில்லை. தனித்தமிழ்ப் புலவர் இழப்பு:மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை. ஊர்ப்பெயர் மாற்றம் தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பலஊர்ப் பெயர்கள் வட சொல்லாகமாற்றப்பட்டுள்ளன. எ-டு தென்சொல் | வடசொல் | குடமூக்கு - குடந்தை | கும்பகோணம் | குரங்காடுதுறை | கபித்தலம் | சிலம்பாறு | நூபுரகங்கை | சிற்றம்பலம் | சிதம்பரம் | பழமலை, முதுகுன்றம் புள்ளிருக்கு வேளூர் | விருத்தாசலம் | வினைதீர்த்தான் கோவில் | வைத்தீசுவரன் கோயில் | பொருநை | தாம்பிரபரணி | மயிலாடுதுறை | மாயூரம் | மரைக்காடு - மறைக்காடு | வேதாரணியம் |
வடமொழியை யெதிர்த்து வெல்லும்வலிமை தமிழுக்கே யிருப்பதால், ஆரியக்கட்டுப்பாடு தமிழ்நாட்டிலேயே மிகக் கடுமையாகப்புகுத்தப்பட்டுள்ளது.
|