கதையுமான ஆரியத்தொல்கதை (புராண) முறைக் கல்வியின்றி, உண்மையும்அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும்அடிமைத்தனத்தையும் அறவே அகற்றுவதுமான அறிவியற்கல்வி புகட்டப்பட்டது. கல்வித் திறமைமிக்கஅனைவர்க்கும் வகுப்பு வேற்றுமை யின்றிப்படிப்புதவி (Scholarship)யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒருபேரரைய ஆட்சிக்குட் கொண்டுவரப்பட்டது.ஆங்கிலராட்சி யிருந்த இலங்கை காழகம் (பர்மா)மலையா தென்னாப்பிரிக்கா முதலிய பலவெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்றதொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர்.ஆங்கில வரசு மதத்துறையில் தலையிடவே யில்லை. குலமத கட்சி யின வேறுபாடின்றி, எளியார்க்கும்வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும் ஒரேநடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது. இதனால்,ஆங்கில ராட்சி நேர்மையையும், புதுச்சேரிகாரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி,"பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்"என்று பழமொழியாக வழங்குமாறு, பொதுமக்கள்புகழ்ந்து பாராட்டினர். சமுதாய இன்பவாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும்முட்டுக்கட்டையா யிருந்த உடன்கட்டை யேறல்,செடிற்குத்தல் (hook-swinging),குழந்தை மணம், நரக்காவு (human sacrifice)முதலிய குருட்டுப் பழக்கவழக்கங்களும்; தக்கர்,பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலியகொடிய கயவர் கூட்டங்களும் அறவே ஒழிக்கப்பட்டன.அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில்விரைந்து வழிச்செல்லும் இருப்புப் பாதைகளும்,அழகிய மாடமாளிகைகளும் மலைநகர்களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும்சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர்காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங்காணாவாறு மாபெரும் படையமைப்பும் ஏற்பட்டன.எல்லாத் திணைக்களங்களிலும் (departments),இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும்தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப்பெற்றனர். இந்தியா முழுதும் ஒன்றுபட்டுநாளடைவில் தன்னாட்சி பெறுமாறு இந்தியத்தேசியப் பேராயம் (Indian National Congress)கியூம் (Hume, Allen Octavian)என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1855-ல்தோற்றுவிக்கப்பெற்றது. அதன் பயனாக, பேராயத்தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சிமண்டலங்களில் மட்டு மன்றி, எல்லா உள்நாட்டுமன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும்பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப்போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்துவந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும்பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும்,அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்தபருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும்பேராயத் தலைவரிடம் இந்தியாவைஒப்படைத்துவிட்டு அமைதியாய் அகன்றனர். அதனாற்பிரெஞ்சியரும் போர்த்துக்கீசியரும் சற்றுப்பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது.
|