ஆங்கிலர் | பிராமணர் |
(1) | வாணிகத்திற்கு வேண்டும் பொருளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக்கேற்றஅறிவொடும், வந்தனர். | கையுங் காலுமாக வந்தனர். |
(2) | வெண்ணிறமாயிருந்தும், தம்மை மக்களென்றே | வெண்ணிறம் பொன்னிறமாயும கூறினர். செந்நிறமாயும்கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவரென்றே கூறி யேமாற்றினர். |
(3) | தம் மொழி மக்கள்மொழி யென்பதைமறைக்கவேயில்லை. | ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா யிருந்தும், தம் முன்னோர்மொழியை யும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம்என்னும் இலக்கிய நடைமொழியையும் (literary dialect),இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன்சொல்கின்றனர். |
(4) | தாழ்த்தப்பட்ட தமிழருட் கடைப் பட்ட பறையரைத் தம் சமையற்காரராக்கி, அவர் ஆக்கியதையும் படைத்ததையும் பிராமணரும் விரும்பி யுண்ணும்படி செய்தனர். | தமிழருள் தலைமையானவராகக் கருதப்படும்மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத்தகாதது போல் நடிக்கின்றனர். |
(5) | அகக்கரண வாற்றலை வளர்க்கும் உண்மையான அறிவியலைக்கற்பித்தனர். | தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் தொல்கதைக்கல்வியைப் புகட்டினர். |
(6)் | தமிழ் ஆரியத்திற்கும்சித்தியத்திற்கும் முந்தியதென்றும், மக்கள் முதன் மொழிக்கு நெருங்கிய தென்றும், கூறினர் (கால்டுவெல்). | தமிழ் சமற்கிருதக்கிளையென்றும் பன மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். (சென்னைப் ப.க.க.தமிழ் அகரமுதலி) |
(7) | குலம் தொழில்பற்றிய தென்றும் மக்கள் படைப்பென்றும் கூறுகின்றனர். | குலம் பிறவிபற்றியதென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன் னானென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை) |
(8) | ஆங்கிலத்திலுள்ள அயற்சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர். | வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களெல்லாம்வடசொல்லே யென்று வலிக்கின்றனர். |
(9) | கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயிலாகப் புகுத்தப்பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர். | சிவனியமும்மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களாயிருந்தும், தமிழர்கோவில் வழிபாட்டையும் சடங்குகளையும்அவர்க்குத் தெரியாத வடமொழியிலேயே ஆற்றிவருகின்றனர். |