(10) | ஆட்சியினாலும் கல்வியினாலும் இந்தியா முழுவதையும் ஒற்றுமைப் படுத்தினர். | ஒரேபேரினத்தைப் பல சிற்றினமாகவும், ஒவ்வொரு சிற்றினத்தையும் பற்பல அகமணப் பிறவிக்குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித் தாட்சிமுறையைப் பிராமணரைப் போற் கையாண்டவர்,இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை. | (11) | தமிழ் தூய்மையாகப் பேசப்படுவதையே விரும்புவர். | நூற்றிற்கு நூறும்வடசொற் கலந்து பேசப்படுவதையே விரும்புவர். | (12) | தம் திருமறை இறைவனால் ஏவப்பெற்ற முற்காணியரால் (தீர்க்கதரிசிகளால்) எழுதப்பட்டதென்பர். | ஐம்பூதச் சிறுதெய்வவழுத்துகளும் ஆரிய வரலாற்றுத்துணுக்குகளுமான வேத மந்திரங்கள்,இறைவனால் இயற்றப் படவில்லையென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும்,பிதற்றுவர். | (13) | தாம் கண்டவற்றையும் செய்த வற்றை யுமே தம் செயலாகக் கூறுவர். | அயலார்நாகரிகத்தையும், இலக்கியத்தையும் தமவென்றேகூசாது பறையறைவர். | (14) | தம் வளமனைக்குள் நல்லார் எவரையும் தாராளமாகப் புகவிடுவர். | தம்இல்லத்திற்குள் பிராமணர் அல்லார்புகின் தீட்டெனக் கருதுவர். | (15) | தமக்கு உதவிய மொழிகளையும் அயலாரையும் நன்றியறிவோடு புகழ்வர். | தமக்குவாழ்வளித்த தமிழையும் தமிழரையும்,இழிந்தோர் மொழி (நீசபாஷை) யென்றும், சூத்திரர்என்றும் பழிப்பர். | (16) | தமிழ் நூல்களை அச்சிடின், உள்ளபடியே அச்சிடுவர். | பழந்தமிழ்நூல்களையும் பாடல்களையும் அச்சிடும்போது,தம் குல மேம்பாட்டிற்கேற்ற வாறு சொற்களைமாற்றியே அச்சிடுவர். | (17) | பிரித்தானியம் உடலைமட்டும் தாக்கி, ஆங்கிலனுடன் நீங்கிவிட்டது. | பிராமணியம்ஆதனையும் (ஆன்மாவையும்) அகக்கரணங்களையும் தாக்கி, உயிர் நீங்கியபின்னும் தொடர்வதாயுள்ளது. |
பிராமணர் தென்னாடு வந்து மூவாயிரம்ஆண்டாகியும், இன்னும் தமிழருடன் உறவாடாவிடினும்உடனுண்ணாவிடினும், ஒரு தெருவிற் குடியிருப்பதைக்கூடவிரும்புவதில்லை. திருச்சிராப் பள்ளியில்தில்லை நகர் தோன்றுமுன், தென்னூரில் அமைந்த ஒருபிராமணத் தெருவில், வழக்கறிஞர் வேதாசலம்பிள்ளை ஒரு மனை நிலம் வாங்காவாறுதடுக்கப்பட்டுவிட்டார். கிறித்தவ விடையூழியர் (Missionaries)தொண்டு இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,முகவை மாவட்டத் திருவில்லிபுத்தூர் வட்டத் தென்எல்லையிலுள்ள சீயோன்மலை
|