என்னும்திருக்குளிப்புத் (Baptist)திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்தகாலத்தில், அருள்புத்தூரிலிருந்து வந்த தேவதாசன்என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தகிறித்தவ ஆசிரியர், கல்பட்டியிற் பிராமணஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாகவந்தாரென்று, அவரேவலால் அடிக்கப்பட்டார். அதைஅவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை,வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளி யில்லத்தையடைந்தார். அவர் வருகை யறிந்த, ஊராளியார்,வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித்தாழிட்டுக்கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத்தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம்கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத்திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்றுசொல்லிவிட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒருகிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்துமன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய்விடும்என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரைஅழைத்துக்கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக்கேட்டுச் சென்றார். குலவேற்றுமைக் கொடுமையினின்றுதப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர்முகமதியராயினர். கால்டுவெலார் கண்ட வுண்மை
கால்டுவெலார் காலத்தில்,தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும்தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்துகிடந்தன. மறைமலையடிகள் போலும் தனித்தமிழ்ப்புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத்தில்லை.இனவிழிப்புறுத்தப் பெரியா ரியக்கமும், இனத்தைமுன்னேற்ற நயன்மைக் கட்சியாட்சியும், தமிழின்பெருமை யுணர்த்தச் சுந்தரம்பிள்ளையும்அன்றில்லை. குமரிநாடென்ற பெயரும் ஒருவரும்அறியார். எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக்கடிமைப்பட்டு ஊமையரா யிருந்த காலத்தில்,கால்டுவெலார் வழிகாட்டுவாரின்றித் தாமேஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும்சமற்கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரியகலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவையென்றும், இலங்கைக் கப்பால் எத் தீவுந்தமிழர்க்குத் தெரியா தென்றும் தவறாகக் கூறநேர்ந்தது. ஆயினும் மொழித்துறையில் ஓர்உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ்ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்தியதும்மாந்தன் முதன்மொழிக்கு நெருக்க மானதுமாகும்என்பதே. இவ் வுண்மை விளங்கித் தோன்றிய சொற்றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப்பெயர்களுமாகும். சுட்டெழுத்துகள் ஆ ஈ ஊ என மூன்றே. அவைபின்னர் அ இ உ எனக் குறுகின. இழைத்தல் மொழி (ArticulateSpeech) தோன்றுமுன்,
|