அஃதாவது எழுத்துஞ்சொல்லுஞ் சொற்றொடரும் ஆகிய மூவகை யுறுப்புகளைக்கொண்டதாக மொழி அமையுமுன், ஆ ஈ ஊ என்பனசுட்டொலிகளாகவே யிருந்து, பின்னர்ச்சுட்டெழுத்துகளாயின. எழுத்து நிலையிலும்,உண்மையில் அவை ஓரெழுத்துச் சுட்டுச் சொற்களே.ஓரெழுத்தாயினும் பலவெழுத்தாயினும், பொருள்தருவனவெல்லாம் சொல்லேயாம். முதற்காலக் குமரிமாந்தர்,இதழகற்றிச் சேய்மை சுட்டியும், இதழைப்பின்வாங்கி அண்மை சுட்டியும், இதழ்குவித்து இடைப்பட்ட முன்மை சுட்டியும் ஒலித்த ஒலிகளே, முறையே ஆ ஈஊ என்பனவாம். அவை சுட்டுச் சைகைகளோடுகூடியதனாலேயே, இன்றும் தவறாது மூவிடத்தையும்குறிக்கின்றன. ஆரியமக்கள் இதை யுணராமையால்,அவர் வாயிற் சுட்டொலிகள் பலவாறு திரிந் துள்ளன.அதனால், அவர் மொழிகளிற் சுட்டுச்சொற்களேயன்றி, அவற்றிற்கு அடிமூலமானசுட்டெழுத்துகளில்லை. தமிழர் குமரிமாந்தரின்நேர்வழியினராதலால், முச்சுட்டொலிகளும்தமிழில் தம் இயல்பு மாறாதிருக்கின்றன. முச்சுட்டொலிகளினின்றே மூவிடப்பெயர்கள் தோன்றி யுள்ளன. படர்க்கைச்சுட்டுப்பெயர் போன்றே, தன்மை முன்னிலைப்பெயர்களும் சுட்டுப்பெயர்களே யாம். தன்மையிலும்முன்னிலை யிலும் சுட்டுப் பெயரன்றிவேறின்மையால், தன்மைச் சுட்டுப் பெயரும்முன்னிலைச் சுட்டுப் பெயரும் தன்மைப் பெயரென்றும்முன்னிலைப் பெயரென்றும் சுருக்கிச்சொல்லப்படுகின்றன. மூவிடச் சுட்டுப் பெயர்கள் | | | ஒருமை | பன்மை | முதல் நிலை: | படர்க்கை | - | ஆன் | ஆம் | | தன்மை | - | ஈன் - ஏன் | ஈம் - ஏம் | | முன்னிலை | - | ஊன் | ஊம் |
குறிப்பு : ஒருமை குறிக்கும் னகரமெய்ஒன் (ஒன்று) என்பதன் முதற்குறையும், பன்மைகுறிக்கும் மகரமெய் உம் என்பதன் முதற்குறையும்ஆகும். உம்முதல் கூடுதல். 2 ஆம் நிலை: | படர்க்கை | - | தான் | தாம் | | தன்மை | - | யான் | யாம் | | முன்னிலை | - | நூன் | நூம் | 3 ஆம் நிலை: | படர்க்கை | - | அவன் | | | | | அவள் | அவர் | | | | அது | அவை | | தன்மை | - | நான் | நாம் | | முன்னிலை | - | நீன் | நீம |
|