சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம்,உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும்,ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில்எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும்என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங்காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத்தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த்திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi bethe Lingua Franca of India? (இந்தி இந்தியப்பொதுமொழியா யிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச்சிறுநூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும்கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக்கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும்சொற்பொழிவாலும் அருந்தமிழ்த்தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணையற்றவர்; பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள். மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம். | |
பெரியார் அருஞ்செயல் நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந்தெரியாது ஓடி ஆங்காங்குப் பதுங்கிக் கொண்டனர்.அன்று பெரியார் ஒருவரே திரவிட-ஆரியப் போர்க்களத்திற் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாதுபோராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்துகற்றோர்க்குந் தன்மான வுணர்ச்சி யூட்டி,பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணா தடித்துவீழ்த்தி, ஆச்சாரியார் புகுத்திய இந்தியைஎதிர்த்துச் சிறைத்துன்பத் திற் காளாகி,கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களைநடத்திவைத் தும், பகுத்தறி வியக்கத்தைத்தோற்றுவித்தும், மூடப் பழக்கவழக்கங் களையொழித்தும், "இடும்பைக்கே கொள்கலங் கொல்லோகுடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு." | (குறள்.1029) | "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்" | (குறள்.26) |
என்னுங் குறள்கட் கிலக்கியமானார். திரு.வி.கலியாணசுந்தர முதலியார்பொதுநலத் தொண்டு பெண்ணின் பெருமை, தொழிலாளர் உரிமை,சமயப் பொது நோக்கு, காதற் சிறப்பு முதலியஉண்மைகளையும் உரிமைகளையும் பண்புகளையும் நாட்டி,பல தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தவர்திரு.வி.க.
|