பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2147

இரு தமிழ்ப் போராடியர்

உலக மொழிகளுள் ஒலிப்பு முயற்சிகுன்றியது தமிழே யென்றும், அதன் நெடுங்கணக்கு முழுநிறைவானதென்றும், மேலை யாரிய மொழிகளும்தமிழினின்று கடன் கொண்டுள்ளன வென்றும், நாடுமுழுதும் மேடையேறிப் பறைசாற்றிய பா.வே.மாணிக்கநாயகரும்; தமிழ்ப் பற்று, ஆரியத்தினின்றுவிடுதலை, தமிழ் வாழ்வு, குடும்ப நலம், கண்மூடிச்சடங்கொழிப்பு முதலியன பற்றி, எளிய இனியமறப்பாடல்கள் ஏராளமாகப் பாடி நாட்டைத்திருத்திய புரட்சிப் பாவலர் பாரதிதாசனும் இருதமிழ்ப் போராடிய ராவர்.

இந்தி யெதிர்ப்புத் தலைவர் இருவர்

மறைமலையடிகளும் பெரியாரும் தத்தம்நிலையில் நின்று இந்திக் கட்டாயத்தை எதிர்த்துநிற்க, இயன்றபோதெல்லாம் நாடு முழுதும் பொதுக்கூட்டங்களும் மாநாடுகளும் கூட்டி, இடை விடாதுஇந்தியை வன்மையா யெதிர்த்த தறுகட்படைத்தலைவர் இருவர், பேரா. சோமசுந்தர பாரதியாரும்தமிழகப் புலவர் குழு அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதமும் ஆவர்.

புலவர் பொறை குறைத்த பேராசிரியர்

ஆரியச் சூழ்ச்சியால், தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தசமற்கிருதப் பகுதியைப் பெருமுயற்சி செய்துநீக்கியவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்.

பல்துறைத் தமிழ்த் தொண்டர்

தாமோதரம் பிள்ளை, பர்.உ.வே.சாமிநாதையர், பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ச. பவா னந்தம்பிள்ளை, த.வே.உமாமகேசுவரம் பிள்ளை,பன்னீர்ச்செல்வம், கா. சுப்பிரமணியப் பிள்ளை,மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வ.திருவரங்கம் பிள்ளை,அண்ணாமலை யரசர், பண்டிதமணிகதிரேசச்செட்டியார், க.ப.மகிழ்நன் (சந்தோஷம்),துடிசைகிழார் அ.சிதம்பரனார், அம்பத்தூர்த்தலைமை யாசிரியர் (M.)சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்பேரறிஞர்,தத்தம் துறையில் தத்தமக் கியன்றவாறு தமிழ்த்தொண்டு செய்தவராவர்.

வரலாற்று நூல் தொண்டர் மூவர்

சேசையங்கார், (P.T.)சீநிவாச ஐயங்கார், (V.R.)இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவரும், தம்வரலாற்று நூலால் தமிழின் பெருமையைக்காத்தவராவர்.