பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2149

நகராட்சித்தலைவர் அராவ அண்ணல் (இராவ்சாகிபு) இரத்தினசாமிப் பிள்ளை.

பேராய வீழ்ச்சியும் தி.மு.க.ஆட்சியும்

நாட்டு விடுதலைக் கொள்கையின்மையால் நயன்மைக் கட்சிதோல்வியுற்றது. நாட்டுமொழிப் பற்றின்மையால் பேராயக்கட்சி வீழ்ந்தது. திராவிடர் முன்னேற்றக்கழகம் 1967-இல் தமிழ்நாட்டு ஆட்சியைக்கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரையார்சென்னை நாடென் றிருந்ததைத் தமிழ்நாடு எனமாற்றினார்; சீர்திருத்தத் திருமணத்தையும்தமிழ்த் திருமணத்தையும் சட்ட முறைப்படிசெல்லுபடியாக்கினார்; கோவை மாணவர் கிளர்ச்சிசெய்த பின், சட்டப் பேரவையில் இந்தி விலக்குத்தீர்மானத்தை நிறை வேற்றினார்.


தமிழ்நாட்டிற்குத் தகுந்த கட்சி தி.மு.க.வே

தமிழ்நாட்டிற் பல அரசியற்கட்சிகளிருப்பினும், நிலையாக இருந்து ஆளத்தக்கதுதி.மு.க.வே.

பேராயம் இந்தியை ஏற்றுத்தமிழ்நாட்டிற்குக் கேடு செய்தது. ஆங்கிலேயன்தமிழர்க்கு மீட்பனாக வன்றி அடிமைப்படுத்தியாகவரவில்லை. அவன் வந்த நிலையில், தமிழன் நாயும்கழுதையும் பன்றியும்போல் பிராமணனின்எச்சிலுண்டியைத் தின்று கொண்டிருந்தான். அஃறிணைபோலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத்தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தினவன்ஆங்கி லேயனே. அவன் வந்திராவிடின், இந்தியாமுழுதும் ஒருபோதும் ஓராட்சிக்குட் பட்டிராது.இரசியா கைப்பற்றியிருப்பின் விடு தலையேபெற்றிருக்க முடியாது. கிழக்கிந்தியக்குழும்பாட்சியில்தான் ஊழலிருந்தது. இங்கிலாந்தரசு இந்திய ஆட்சியை மேற்கொண்டதி லிருந்துமேன்மேலும் சீர்திருத்தம் நிகழ்ந்துகொண்டேவந்தது. இறுதியில், இந்தியரைத் தம்மாட்சிக்குத்தகுதிப்படுத்திய பின் தானே நீங்குவதற்கிருந்தான் ஆங்கிலேயன். பேராயந்தான் அவனைமுந்தித் துரத்தியது. அதனால் இந்தியா அடைந்தபொருளிழப்பும் ஆளிழப் பும் அமைதிக் குலைவும்கொஞ்சநஞ்சமல்ல. பேராயம் நயன்மைக் கட்சிக்குமாறாகவே பிராமணரால் தமிழ்நாட்டிற்புகுத்தப்பட்டது. அதைத் தோற்றுவித்த பிராமணர்இவ் வுலகினின்றோ அக் கட்சியினின்றோநீங்கிவிட்டனர். அடிமைத்தனமும் தன்னலமுங்கொண்ட தமிழரே அதில் இன்னும்ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். பெருநன்மை செய்தஆங்கிலேயனைப் பெருந்தீங்கு செய்தவனாகக் கூறுவது,கழுவாயில்லா வழுவாயாகும்.

"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாமுய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு." 

(குறள்.120)