பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2153

அரசினர் சாலைக் கடத்த (Govt.Road Transport) அறிவிப்புத் தொடர்களுட்பல புணர்ச்சியின்றி வரையப்பட்டுள.

எ-டு: தெற்கு பணிமனை, போக்குவரத்துதுறை, அரசு போக்குவரத்து, தண்டையார் பேட்டைபணிமனை.

தமிழ் புணர்ச்சி மொழியாதலால்,வலிமிகும் இடத்தில் மிகுக்காது எழுதுவது வழுவாம்.மாணவரும் அதைப் பின்பற்ற நேரும்.அறிவியலதிகாரம் வேறு, ஆள்வினை யதிகாரம் வேறு.

என்னை அகரமுதலிப் பணிக்கமர்த்தின்பிராமண எதிர்ப் புண் டாகுமென்று, சென்னைப்பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர் (ViceChancellor) அஞ்சுவதாகத் தெரிகின்றது.பொய்யும் புரட்டும் சொல்லி ஒரு சிற்றின அயலார்தமிழ்நாட்டி லிருந்துகொண்டு துணிந்துஏமாற்றும்போது, உண்மையைச் சொல்லி முன்னேற,மேலையர் திங்களை யடைந்த இவ் விருபதாம்நூற்றாண்டிறுதி யிலும், ஏன் தமிழன் அஞ்ச வேண்டும்?இங்ஙனம் அஞ்சி யஞ்சிச் செத்தால், என்றுதான்தமிழன் முன்னேற முடியும்?

"குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்
குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள்"

என்பது முதுமொழி.

என்னைப் பணியில் அமர்த்துமாறுதமிழன்பர் வேண்டின், எனக்கு ஏதோ நன்மை செய்யச்சொல்வதுபோல் அதிகாரிகள் கருது கின்றனர். அதுதமிழுக்கே நன்மை என்றறியும் ஆற்றல் அவர்கட்கில்லை. இது அவர்களது தமிழறியாமையையோதமிழ்ப்பற் றின்மையையேதான் காட்டும்.


புலவர் பெருமிதம்

சோழன் நலங்கிள்ளியிடமிருந்துஉறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்றுவந்தானென்று காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளிகொல்லப் புகுந்தவிடத்து, கோவூர்கிழார் என்னும்புலவர்,

"வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந் தேகி