பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2155

தமிழ்நூல் வெளியீட்டுத் துறையில் வாகைசூடியும், இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில்ஆழ்ந்து ஈடுபட்டும், ஓய்வுபெற்ற தமிழ்ப்புலவர்க்கு வேலை யளித்தும், சென்னை வாணர்க்குச்சிறப்பாகப் பயன்படும் மறைமலை யடிகள்நூல்நிலையத்தை நிறுவியும், ஆங்காங்கு நூற்காட்சியமைத்தும், ஆண்டுதோறும் மறைமலையடிகள் விழாக்கொண்டாடியும், தனித்தமிழ்த் தொண்டரைஊக்கியும், இடைவிடாது தமிழைக் காத்து வருபவர்,தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை ஆவர்.

(3) பாவலர் பெருஞ்சித்திரனார்

பட்டம்பதவியோ செல்வச் சிறப்போஅமைச்சர் துணையோ சற்றும் இல்லாதிருந்தும்,தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் அரசுகளும்வெட்கித் தலைகுனியவும், அகப்பகையும் புறப்பகையும்அடியோ டொழியவும், தமிழன்பர் தம் தவப்பயனைவியந்து மகிழவும், (சித்தியம் ஆரியம் சேமியம்என்னும்) முப்பெரு மொழிக் குடும்பங்களுக்கும்குமரிநாட்டுக் குலத்தமிழே உலக முதற்றாய்உயர்தனிச் செம்மொழி யென்று முரசறைந்துசாற்றவும், மக்களினமுள்ள காலமெல்லாம் முத்தமிழ்அரியணையில் வீற்றிருந்து மொழியுலகம் முழுவதையும்ஒருகுடைக்கீழ் ஆளுமாறும், தமிழன் தலைநிமிர்ந்துஏறுபோற் பீடுநடை கொள்ளுமாறும், எருதந்துறைஆங்கிலச் சொற்களஞ்சியத்தை யொத்த, பன்னிருமடலச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்அகரமுதலியை உருவாக்கவும் வெளியிடவும், இதுவரைஎவரும் செய்யாத வகையில் 'தென்மொழி'த் திட்டம்வகுத்து, எதிர்காலத் தமிழ் வரலாற்றில் தம்பெயரைப் பொன்னெழுத் திற் பொறிக்குமாறுசெய்துகொண்டவர், 'தென்மொழி' ஆசிரியர் பாவலர்பெருஞ்சித்திரனார் ஆவர்.

புரட்சிப் பாவேந்தன் கனவு இன்னும்நனவாகவில்லை

தமிழை மூலமாகக் கொண்ட மேலையாரியவகையான கிரேக் கத்திற்கு நெருக்கமாயிருந்து,இந்தியாவிற்கு வந்தவுடன் வழக்கற்றுப் போய்வடதிரவிடமாகிய பிராகிருதத்துடன் இரண்டறக்கலந்த வேதமொழியாகி, பின்னர்த் தமிழை யண்டிஅதனாற் பெரிதும் வளம்படுத்தப்பட்டு அரைச்செயற்கை இலக்கிய நடைமொழியான சமற்கிருதத்தைஉலக அளவில் தலைமையாக்குதற் பொருட்டு, ஒரு புதியசமற்கிருத ஆங்கிலப் பேரகர முதலி உருவாக்குதற்கு,இந்திய நடுவணரசும், மராட்டிர அரசும், பல்கலைக்கழகநல்கைக் குழுவும், பூனாப் பல்கலைக்கழகமும், ஒன்றியநாட்டினங்களின் அமைப்பும் (U.N.O.),இரு கோடிக்குமேல் ஒதுக்கி யுள்ளன.

தமிழ்நாட்டிலோ, உலக முதற்றாய்உயர்தனிச் செம்மொழியான செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கவோ,சமற்கிருதக்