கல்வியறிவும் துப்புரவும் ஒழுக்கமும்இன்றியமையாதன. இவ்வகை முயற்சியில் நாடார்குலத்தினரைப் பின்பற்றல் வேண்டும். பொதுத் தேர்தலில் தகுந்த தலைவரைத்தேர்ந்தெடுக்கவும், தமிழ்ப் பொத்தகவெளியீடுகள் பல்கவும், சிறந்த அறிஞரும் புதுப்புனைவாளரும் தோன்றவும், புலவர் போற்றப்படவும்,கட்டாயத் துவக்கக் கல்வி பெரிதுந் துணை செய்யும்,ஆயிரக்கணக்கான ஆசிரியர்க்கு வேலையுங்கிடைக்கும். (6) பிறப்புப் பற்றாது தொழில்பற்றியகுடிமதிப்பு(census) (7) கல்வித்துறையிற் குலப்பட்டத்தைநீக்கல் (8) மக்கள்தொகைக் குறைப்பு இந்தியா 30 கோடி மக்களைத்தான்தாங்கமுடியும். இன்று 56 கோடியாக மக்கள்தொகைபெருகியுள்ளது. இங்ஙனமே தமிழ்நாடும் இருமடங்குபெருகியுள்ளது. இதனால், காடழிவும் மழையின்மையும்உணவுத் தட்டும் விறகு தட்டும், வேட்டை விலங்குபறவையின மறைவும், கால்நடை மேய்ச்சல்நிலமின்மையும், புன்செய்நிலக் குறைவும், குடியிருப்புநில வீடின்மையும் ஏற்பட்டுள்ளன. இக் குறைகள்மேன்மேலும் வளரத்தான் செய்யும். மக்கள்பெருக்கத் தடுப்பைவிட (ஏற்கெனவேயுள்ள) தொகைக்குறைப்பே நன்று. இதற்கென்று தனித் திணைக்களம்ஏற்படுத்தி, உள்ள தொகையிற் பாதி குறையும்வரை,ஐந்தாண்டிற் கொருமுறையே திருமணங்கள் நடைபெறுமாறுசட்டம் பிறப்பித்தல் வேண்டும். இன்றேல், அடுத்தநூற்றாண்டு பஞ்சநிலை ஏற்பட்டு, அரசினர் அடக்கமுடியாவாறு களவுங் கொள்ளையுங் கொலையும் மிகும். (9) முன்னோக்கும் சேணோக்கும் நாடாளும் அரசன், தன் காலத்திற்குப்பின்பும் நாட்டிற்கு நன்மை பயக்குந்திட்டங்களைக் கையாள வேண்டும். கடைக்கழகப் பாண்டியரும், கரிகால்வளவன், இராசராசன், இராசேந்திரன் முதலியசோழரும், இலங்கையில் தமிழரைக் குடியேற்றிஎளிதாக அதைத் தமிழ்நிலமாக்கி யிருக்கலாம்.அதை அவர் செய்திலர்; தம்கால உயர்வை மட்டும்கருதினர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்குப் பின்கடலாட்சி பெற்ற ஆங்கிலர், ஆறாயிரங்கல்தொலைவில் இருந்து வந்து, அதன் மேலும்தமிழகத்திற்குத் தென்கிழக்கில் நாலாயிரம்கல் தொலைவிலுள்ள தென்கண்டம் (ஆத்திரேலியா)முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். தமிழரோ,கி.மு50ஆம் நூற்றாண்டிலேயே கடலாட்சி பெற்றுச் சாலித்தீவைக் (java)கைப்பற்றி இருந்தும், கி.பி.10ஆம் நூற்றாண்டி
|