பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2159

(2) தனித்தமிழ்

தமிழ் என்பது தனித்தமிழே.தனித்தமிழா லன்றிக் கலவைத் தமிழால் தமிழன்உயர்வடைய முடியாது. தமிழென்று பெயரிட்டுக் கலவைத்தமிழ் வழங்குபவன், அவலை நினைத்துக்கொண்டு உரலையிடிப்பவனே யாவன்.

(3) ஆராய்ச்சியாளரைப் போற்றலும்(கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.D. நாயுடு) போன்ற புதுப்புனைவாளரை (inventors)ஊக்கலும்

செயற்கை மழை பொழிவிப்பு, கடல்நீரைநன்னீராக்கல், மண் ணினின்று நேரடியாகஉணவுருவாக்கல், பாலையை மருதமாக்கல், கரடுகளையும்பாறைகளையும் தகர்த்து மனைநில மாக்கல், கதிரவன்வெம்மையைச் சமையற்குப் பயன்படுத்தல், நச்சுக்காய்கனிகளை நல்லனவாக்கல், கனிதரா மரஞ்செடிகொடிகளைக் கனிதரச் செய்தல்,வெப்பமானகாலத்திலும் இடத்திலும் குளிர்காற்றுவீசுவித்தல், தீங்கு செய்யும் பூச்சிகளையும்ஊரிகளையும் அறவே தீர்த்தல், மருந்திலாநோய்கட்கு மருந்து காண்டல், உள்ளக் கருத்தைஅறிதல், இறந்தவனை எழுப்பல், பேரொலியைச்சிற்றொலியாக்கல், மூளையைத் திருத்தி மடயனைமதிஞனாக்கல், கூனுங் குருடும் ஊமுஞ் செவிடும் முதலியஎச்சப் பிறவிகளைச் சீர்ப்படுத்தல் முதலியபல்வேறு அருஞ்செயல்களை, அறிவியற் பெருமதிஞரைக்கொண்டும் சூழ்ச்சியத் திறவோரைக் கொண்டும்ஆற்றுவித்தல்.

(4) பல்கலைக்கழகங்களில்ஆராய்ச்சிப் பதவிகளில் இருக்கும் தமிழ்ப்பகைவரை அகற்றல்

பேரா. (P.T.)சீனிவாச ஐயங்காரும் பேரா. (V.R.)இராமச்சந்திர தீட்சிதரும் போல், தமிழர்தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்றுகொள்பவரையே, பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத்தலைவராக அமர்த்துதல் வேண்டும்.

அறுவகை ஆராய்ச்சித் தகுதி:

பரந்த கல்வி, மதிநுட்பம், நடுவுநிலை,அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா.

(5) இலவசக் கட்டாயத் தொடக்கக்கல்வி

துவக்கக் கல்வியால்தான்,தாழ்த்தப்பட்ட வகுப்புப் பொது மக்கட்குநாகரிகமும் தன்மான வுணர்ச்சியும் துப்புரவும்உண்டாகும். அதனால் தீண்டாமை நீங்கித் தமிழினஒற்றுமை ஏற்படும். ஒருசிலர் கல்வி கற்பதால்மட்டும் முன்னேற்றம் வந்துவிடாது. பிற வகுப்பாரொடு குடியிருக்கவும் கடைத்தெருவிலிருந்து வணிகஞ்செய்யவும்,