எஞ்சிய சோழ பாண்டிநாட்டுநிலப்பரப்பே, இன்று தமிழ்நாடும் புதுவை நாடுமாகப்பிரிந்த தமிழகமாக இருந்து வருகின்றது. இதிலும் சில வட்டங்களைக்(கூற்றங்களைக்) கன்னடர் சுறண்டப்பார்க்கின்றனர். தமிழ்த் திரிபினாலேயே, தமிழர்பல்வேறு சிற்றினங்களாக மாறினர்; பல்வேறுநாடுகளும் தோன்றின. அதனால் தமிழகமும் வரவரக்குறுகிற்று. இனிமேலுங் குறுகாவாறு, செந்தமிழ்நடையைப் போற்றிக்காத்தல் வேண்டும். ஆரிய நச்சுத்தன்மை இன்னும் அறாமை மறைமலையடிகள் தனித்தமிழ்க்கிளர்ச்சி தொடங்கிய 1916ஆம் ஆண்டிலிருந்து,வடசொல் வழக்கிற்கு எத்தனையோ வகையில்எதிர்ப்பிருந்து வந்தும், இன்னும் ஆரியர் ஒல்லும்வகையிற் செல்லும் வாயெல்லாம் வடசொல்லைப்புகுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.அச்சுத நாயர் (எம்.ஏ.) மலையாள நாட்டிற்பூங்குன்னம் என்னும் ஊரிலிருந்தபோது, அவ்வூர்ப்பிராமணர், அவ்வூர்ப் பெயரை புஷ்பகிரி என்றுமாற்ற நெடுநாட் பெருமுயற்சி செய்து, இறுதியிற்பேரா.அச்சுத நாயரின் துணை வேண்டினர். அதற்கு அவர்இசையாததால், அப் பெயர் மாற்றம் நிகழ வில்லை. (1) ஆங்கிலக் கல்வி தமிழுக்கு நெருக்கமாயும் அறிவியல்இலக்கியப் பெட்டகமாயும் அமைப்பிலும்வழக்கிலும் உலகப் பொதுமொழியாயும் உள்ளஆங்கிலம், தமிழர் முன்னேற்றத்திற்குஇன்றியமையாதது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும்கல்வி வாயிலாயிருத்தல் வேண்டும். தமிழ்வாயிற்கல்வியால் தமிழ்ப்பற்று வந்துவிடாது;ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுப்போய்விடாது. தமிழ்வாயிற் கல்வியே தமிழ்ப்பற்றைக் காட்டுமென்பது, ஆங்கிலர்மீது வெறுப்பும்ஆங்கில வறியாமையுங் கொண்ட அரசியற் கட்சித்தலைவராற் பரப்பப்பட்ட, குருட்டுமடக் கூற்றாகும்.இரசியரும் சப்பானியரும்போல் தமிழர்புதுப்புனைவாளராகும் வரை, ஆங்கிலவாயிற் கல்விஇருந்தே தீரல் வேண்டும். குளத்தொடு புலந்துகுளியாமலும் கூவவொடு புலந்து குடியாமலும் போனவனுக்கு,கேடேயன்றி ஆக்கமில்லை.
|