(12) பொறுப்பாட்சி (ResponsibleGovernment) மக்கள்தொகை மிகாதஇடைக்காலத்தில், அரசன் அல்லது முதலமைச்சன்நாடாளு மன்றத்திற்கே (Legislature)கணக்கொப்பு விப்பவனாயிருந்தான். இன்றோமுன்போல் எல்லார்க்கும் பிழைப் பின்மையால்,ஆட்சித்தலைவன் குடிகள் என்னும் பொதுமக்கட்கேநேரடிப் பொறுப்பாளன் ஆகின்றான். ஆதலால்,நாட்டிற் பிறந்த அனைவர்க்கும் பிழைப்பு வழிவகுத்தல் வேண்டும். அஃதியலாக்கால், நேர்மையானமுறையில் மக்கள்தொகையைக் குறைத்தல் வேண்டும். வீடு கட்ட நிலப்பரப்பைப்பயன்படுத்தாது வான்வெளியையே பயன்படுத்தி,வானளாவிகள் (Skycrapers)எழுப்ப வேண்டும். நிலப் பரப்பைப் பயன்படுத்தின்,பழனங்களையும் ஏரிகளையும் விட்டுவிட்டுப்பாறைநிலத்திலும் கல்லாங்குத்திலும் முரம்புமேட்டிலுமே கட்ட வேண்டும். விளைநிலங்கள் என்றும்விளை நிலங்களாகவே யிருத்தல் வேண்டும். (13) மாணவர் அரசியற் கட்சியிற்சேராமை மாணவர், கல்வியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய பயிற்சியாளராயும்,தத்தம் திறமைக்கும் மனப்பான்மைக் கும் ஏற்பப்பிழைப்புவழி தேடும் முயற்சியாளராயும், பட்டறிவும்அகக்கரண வளர்ச்சி நிறைவும் பெறாதஇளம்பருவத்தாராயும் இருப்பதால், அவர் அரசியற்கட்சிகளிற் சேர்தலோ சேர்க்கப் படுதலோ,கல்விநெறிக்கு மாறும் முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை யும் ஆன கேடாகும். இதைக்கல்வியமைச்சன்மார் கண்டித்துத் தடுக்கவேண்டியிருக்க, அதற்கு மாறாக அதை ஊக்குவது, வேலியேபயிரை மேய்தல் போன்றாம். அரசியற் கட்சியைச்சார்ந்த மாணவரின் அகக்கரண வியல்பு,பெரும்பாலும் இயற்கை வளர்ச்சியடையாதுகட்சியச்சில் வார்க்கப்பட்டுவிடுகின்றது.அதனால், அவர் தனிப் பட்ட தன்மையும் திறமும்அவர்க்கும் நாட்டிற்கும் பயன்படாது போகின்றன. மாணவரைக் கல்லூரிகளில், சிறப்பாகமருத்துவக் கல்லூரி களில் சேர்ப்பதற்கும்; வேலைவேண்டுவோரை வேலையில் அமர்த்தற்கும் கையூட்டுவாங்காமை. தமிழின ஒற்றுமை இங்கிலாந்தில் ஐபீரியர்,கெலத்தியர் (Celts),பித்தியர்(Picts),காட்டியர் (Scots),ஆங்கிலர், சாகசனியர் (Saxons),சூதியர் (Jutes), தேனியர்(Danes), நார்மணியர் (Normans)முதலிய ஒன்பான் அல்லது பன்னிரு சிற்றினங்கள்கலந்த கலவைப் பேரினமா யிருப்பவர் இற்றைஆங்கிலேயர். அதனால், மதிநுட்பமுள்ள மக்கள்பிறந்து, நீராவியும்
|