பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2163

நெய்யாவியும் மின்விசையும்கொண்டியக்கும் பல்வேறு பொறிகளையும்ஊர்திகளையும் புனைந்து, இற்றை அறிவியல்களைத்தோற்றுவித் திருக்கின்றனர். தமிழ்நாட்டிலோ,ஒரேயினம் ஆரியச் சூழ்ச்சியால் நூற்றுக்கணக்கானஅகமணப் பிரிவுகளாகச்சிதைக்கப்பட்டுவிட்டதனால், இன்றும் தமிழர்

".......................வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
.................................................
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்" 

(சிலப். 15:207-14)

நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி,களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி,புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியனவுமான, முன்னோர்செய்த மதிற் பொறிகளையுஞ் செய்யத் தெரியாது,மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் நரவண்டியும்தொடர்வண்டிக் கூண்டுமே செய்யும் நிலையிலுள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள மக்கள்பெயரெல்லாம் பெயரளவில் வழங்குகின்றனவே யன்றி,தமிழ்நாட்டிற்போல் சேம்பர்லேன் முதலியார்,சர்ச்சில் செட்டியார், அத்திலீக் கவுண்டர்,ஈடன் நாடார், வில்சன் பிள்ளை என்று பொருளற்றவால்களுடன் வழங்குவ தில்லை. (இங்ஙனமே ஏனைநாடுகளிலும்.)

அன்றியும், அங்கு மக்கள் வகுப்பைவினவின், தொழிலடிப் படையில் உழவர் வணிகர்ஆசிரியர் கணக்கர் என்று சொல்லுகின்றனரேயன்றி, இங்குப்போல் ஆசிரியனைக்கம்மாளன் (ஆச்சாரி) என்றும், கணக்கனை வணிகன்(செட்டியார்) என்றும், கட்டட வேலை செய்பவனைப்படைத்தலைவன் (முதலியார்) என்றும், தையற்காரனைப் பாடகன் (பாணன்) என்றும்,ஒரே வேலைசெய்பவரைப் பல்வேறு தொழிற் குலத்தாராகவும்,இல்வாழ்வானைத் துறவி (ஐயர்) என்றும்பகுத்தறிவின்றிச் சொல்வதில்லை.

இனி, மாணவனின் அறியாமையைப்போக்கி அவனுக்கு உண்மையான செய்திகளைஅறிவிக்கக் கடமைப்பட்டுள்ள ஆசிரியன்,மாந்தனூலும் (Anthropology)உடல்நூலும் (Physiology)கற்றவனா யிருப்பினும், அவற்றிற்கு மாறாக,பிறப்படிப்படையில் அவனை ஓர் இனமாகவும் (Species)தன்னை மற்றோரினமாகவும் கூறுவதும், இங்ஙனமேகல்வியதிகாரியும் கல்வித்துறை இயக்குநரும்கல்வி அமைச்சரும் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகருங்