பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2167

யுணர்ச்சியும் மிக்க இக் காலத்தும் நீவிர்தொடர்தல் இயலாத தொன்றாம்.

"ஊருடன் கூடி வாழ்." ("Whenyou are at Rome do as Rome does.") என்றமுறைப்படி, தமிழருடன் உடன்பிறப்புப்போற் கூடிவாழ்ந்து, உண்மையாகவும் நன்றியறிவுடனும் தமிழைத்தாய்மொழியாகப் பேணின், நீவிரும் நும்வழியினரும் முழுஉரிமையுடன் தமிழ்நாட்டில் வழிவழிவாழவும் ஆளவும் இடமுண்டாம்.

தமிழைப் போற்றாது வெறுப்பவர்தமிழ்ப் பகைவராகவே நடத்தப்படுவர். ஒருசிலவையாபுரிகள் நுமக்குத் துணையாயிருப்பது உண் மையே.ஆயின், அக் கூட்டம் நாளடைவில் தேய்ந்து மாய்ந்துபோம்.

தமிழே திரவிடத்திற்குத் தாயும்ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச்செம்மொழி யென்று, தமிழ்நாட்டிலும்இந்தியாவிலும் மட்டுமன்றி, உலக மேடையிலும்நாட்டப்பெறும். அதன்பின், தமிழ் நாட்டிற்சமற்கிருதம் இன்றுள்ள நிலையில் இருத்தல் இயலாது.

"எண்ணெயும் உண்மையும் இறுதியில்மேற்படும்." ("Oil and truth get uppermostat last.")


புரட்சி

இன்று தமிழன் முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டையா யிருந்து பழமை போற்றி வருபவர்,பெரும்பாலும் முந்திய அல்லது மூத்த தலைமுறையினரே.இனிமேலும் அவ் வநாகரிகக் கொள்கையில்ஊன்றியிருப்பாராயின், விரைந்து ஒரு பெரும்புரட்சியே கிளர்ந்தெழும். இளந்தமிழர்உள்ளத்திலெல்லாம் ஓர் எரிமலை கொதித்துக்குமுறிக்கொண்டிருக்கின்றதென்றும், எச்சமையத்திலும் அது பொங்கி வழியுமென்றும் அவர்அறிவாராக.