பர். காமில் சுவலெபில்,மறைமலையடிகளும் சோமசுந்தர பாரதியாரும்பாரதிதாசனும் தமிழைக் கெடுத்தவர் என்றுஅறிவித்தார். அவர் நற்றிணை என்னும்கடைக்கழகச் செய்யுட் பனுவலையும் 'நாலுவேலி நிலம்'என்னும் கடுங்கொச்சை நாடகப் பொத்தகத்தையும்அடிப் படையாகக்கொண்டு, தமிழ் தோன்றிய காலம்கி.மு. 1500 என்று கணித்திருப்பதும், அது சென்னைப்பல்கலைக்கழகத்தால் வெளி யிடப்பட்டிருப்பதும்,இற்றைத் தமிழர் மாபெரும் பேதையர் கூட்டம்என்பதையே காட்டும். பாரிசு மாநகரில் நடந்த 3ஆம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு மாநாடும், சுற்றுலாக்கூட்டமாகவே நடந்தது. அதிற் கலந்துகொண்டகட்சித் தலைவரையெல்லாம் தகுதி வாய்ந்தவரேயென்று, பொறுப் பற்றதனமாய் எழுதினார் ஒருபொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர்.சிந்துவெளி நாகரிகம் திரவிடரது என்பது பர்.காமில் சுவெலபிலால் மறுக்கப்பட்டு, அதன்தீர்ப்பு திரு. ஐராவதம் மகாதேவனிடம்ஒப்படைக்கப்பட்டது. உலகத் தமிழ்ப் பேரவையின்நோக்கம் ஆராய்ச்சியே யன்றி, தமிழைவளர்ப்பதோ பரப்புவதோ அன்றென்று திருத்தனிநாயகத்ததால் வெளிப்படையாகச்சொல்லப்பட்டது. அயல்நாட்டார்க்குத் தமிழைப்பற்றியிருந்த உயர்வான எண்ணம் வரவரத் தாழ்ந்துபோனதே, முக்கருத்தரங்கு மாநாடுகளின் விளைவுமாகும். சமற்கிருத வெறியரான இருதிசை யாரியரும்வையாபுரிகளும் வணிகப் புலவரும் தமிழறியாதவருமேதிருத் தனிநாயகத்தின் துணைவர். ஆதலால், அவரால்தமிழுக்கு நன்மையை எதிர்பார்ப்பது,களாச்செடியிற் பலாப்பழத்தைப் பறிப்பதுபோன்றதே. பட்டம் பெறுவதும் பதவியுயர்த்துவதும்பெரும் பொருளீட்டு வதுமே வணிகப் புலவர்குறிக்கோள். "இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு" | (குறள்.374) |
குமரிநாடே தமிழன் பிறந்தகம்என்பதை, வையாபுரிகள் போன்றே வணிகப் புலவரும்ஒத்துக்கொள்வதில்லை. "உலகத்தார் உண்டென்ப தில் லென்பான்வையத் தலகையா வைக்கப் படும்" | (குறள்.850) |
A History of South India, The History and Culture of theTamils, New Light on the Indus Civilization, Aryataranginiமுதலிய எத்தனையோ வரலாற்று நூல்கள், தமிழுக்கும்தமிழர்க்கும் கேடாக வெளியிடப்பட்டு வருகின்றன.அவற்றை வணிகப் புலவர் கண்டிப்பதே யில்லை.
|