"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர்" | (குறள்.1072) |
வணிகப் புலவர் சிலர், பண்டாரகர்பட்டம் பெற்ற அளவில், தம்மை அனைத்துமறிந்தவரென்றும் எல்லாம் வல்லுநரென்றும் இறப்பமதித்து, பல்கலைக்கழகத் துணைக் கண்காணகரையும்அமைச்சரையும் ஏமாற்றி வருகின்றனர். "தான்அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள், அவனைவிட்டொழி. ("He who knows not that he knowsnot is a fool, shun him.") என்பது ஓர்ஆங்கிலப் பொன்மொழி. இங்ஙனம் தம்மை இறப்ப மதிப்பதால்,தமிழ் கெடினும் கெடுக; தம் பெயர் மங்கக்கூடாதென்று, மறைமலையடிகளையும் அவர்கள் வழிப்புலவரையும் இருட்டடிப்புச் செய்து, செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பைத்தம்மால் இயன்றவரை தடுத்து வருகின் றனர். இதுகாலஞ் சென்ற பர். சேதுப்பிள்ளையிடம் பெற்றபயிற்சி. பிறநாட்டார்க்குக் கொச்சையும் (barbarism)உலக வழக்கும் (colloquialism)ஒன்றாம். தமிழர்க்கோ அவை முறையே தள்ளத்தக்கதும் கொள்ளத் தக்கதுமாய் வெவ்வேறாம். பர். காமில் சுவெலபில், தம்'Lectureson Hisotrical Grammar of Tamil' என்னும்ஆங்கிலச் சுவடியில், கொச்சைத் தமிழையும் உலகவழக்குத் தமிழொடு சேர்க்கும் முப்பேராசிரியரைவானளாவப் புகழ்ந்து, "The three mosteminent Tamil Scholars of our time" என்று (ப.12)குறித்திருக்கின்றார். அம் மூவருள், ஒருவர்மொழிநூலையே அறியாதவர்; ஒருவர் மேலையர்மொழிநூல்களைப் படித்துமட்டும் இருப்பவர்; ஒருவர்சமற்கிருத அடிப்படையில் தமிழாய்ந்தவர். இந்நூற்றாண்டில் முப்பெருந் தமிழ்ப் புலவர் என்றுசொல்லத் தக்கார், மறைமலை யடிகளும்சாமிநாதையரும் கா. சுப்பிரமணியப் பிள்ளையுமே. சமற்கிருதப் பேராசிரியரான பர்.பரோவும் பர். எமெனோவும் சிறந்த அறிஞரேனும்,தமிழைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலிகொண்டும், திரவிட மொழிகளை அவற்றிலுள்ள அகரமுதலிகள் கொண்டும் படித்தவரே யன்றி, திரவிடமொழிகட்குத் தாயான தமிழை ஆழ்ந்துஆய்ந்தவரல்லர். அதனால், ஆரியமொழிதிரவிடத்தினின்று 500 சொற்கள்போற்கடன்கொண்டுள்ளதே யன்றி, ஆரிய மொழியமைப்பிற்குள்திரவிடம் புகவில்லையென்று முடிபு கொண்டுவிட்டனர்.அது தவறென்பது, என் 'A Guide to WesternTamilologists' என்னும் ஆங்கில நூலில்விரிவாக விளக்கப்பெறும். எத்துணைப்பேரறிஞராயினும், அடிப்படை தவறாயின் முடிவும்தவறாகவே யிருக்கும். மேலை மொழிநூலார் எல்லாரும்,தமிழர்
|