பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2175

முதற்கண், ஒரே குலத்திலுள்ள அகமணப்பிரிவுகளெல்லாம் புறமணப் பிரிவுகளாகலாம்.

அதையடுத்து, தெற்கும் வடக்கும்வெவ்வேறு பெயர் கொண் டுள்ள ஒரே குலத்தார் ஒரேபெயர் கொள்ளலாம். எ-டு: நாடாரும் கிராமணியாரும்,கைக்கோளரும் செங்குந்தரும்.

அதன்பின், வேளாண் குடியினின்றேபடைத்தலைமைப் பதவி பற்றிப் பிரிந்த முதலியார்குலத்தினர். பிள்ளைப் பட்டமுள்ள மரக்கறிவெள்ளாளருடன் மணவுறவு கொள்ளலாம்.

அதன்பின், முக்குலத்தோர் (கள்ளர்,மறவர், அகம்படியர்) ஒரே குலத்தாராகலாம்.

அதன்பின், உண்டாட்டிற்கலந்துகொள்ளுங் குலங்கள் மணவுற விலும்கலக்கலாம்.

அதன்பின், சற்றே ஏற்றத் தாழ்வுள்ளகுலங்கள், முன்பு உண்டாட்டிற் கலந்து பின்புகொள்வினை கொடுப்பனையுஞ் செய்து கொள்ளலாம்.அங்ஙனஞ் செய்யும்போது, ஒரு குலத்தாரின் உணவு முறைஇன்னொரு குலத்தார்க்கு ஏற்காவிடின், அதைமாற்றிவிட வேண்டும்.

இறுதியில், கல்வியிலும்நாகரிகத்திலும் துப்புரவிலும் உயர்ந்து, ஒத்தபதவியில் அல்லது நிலைமையிலுள்ள தாழ்த்தப்பட்டவகுப்புக் குடும்பங்களுடன், உயர்ந்த வகுப்பாரும் இருவகையிலும் உறவாடலாம்.

தாழ்த்தப்பட்டோரின் உயர்விற்குஇலவசக் கட்டாயத் தொடக்கக் கல்விஇன்றியமையாதது. அதனால்தான், தன்மானவுணர்ச்சியும் துப்புரவும் உண்டாகும். துப்புரவும்நாகரிகமும் இன்றேல் தீண்டாமை ஒழியாது.தீண்டாமை ஒழிந்த பின்னும், சலக்கப்புரைவாருதலும் முடிதிருத்துதலும் போன்ற தொழில்செய்வார் வீட்டிலுண்டல் எல்லார்க்கும் ஏற்காது.

தமிழர் தமிழருடன் உறவு கலந்தபின்,தெலுங்கர் கன்னடர் முதலிய திரவிடரொடும் உறவுகலக்கலாம். அதன்பின், தமிழ்ப் பற்றுள்ள இந்திமக்களொடும் மணத்தொடர்பு கொள்ளலாம்.

மக்கள் தாமாகத் திருந்தாவிடின்,எதிர்காலத்தில் உண்மையான பொதுவுடைமையாட்சிவந்து விரைந்து திருத்திவிடும். இன்றுபொதுவுடைமையென்று உலகில் வழங்குவதுகூட்டுடைமையின் (Socialism)முனைந்த வகையேயன்றி வேறன்று. உண்மையானபொதுவுடைமை மண்ணில் விண் என்னும் நூலில்விரிவாக விளக்கப் பெறும்.